Load Image
Advertisement

துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எப் வீரர்கள் 4 பேர் பலி

Tamil News
ADVERTISEMENT
அமிர்தசரஸ்: சக வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எல்லை பாதுகாப்பு படையை (பிஎஸ்எப்) சேர்ந்த வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் உயிரிழந்தார். அவர் தன்னைத்தானே சுட்டு கொண்டாரா அல்லது மற்ற வீரர்கள் பதிலடியில் உயிரிழந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள அட்டாரி - வாகா எல்லையில் இருந்து சுமார் 13 கி.மீ., தொலைவில் காசா பகுதியில் பிஎஸ்எப் பின் 144வது பட்டாலியன் முகாம் அமைந்துள்ளது. இன்று (மார்ச் 6) 9:30 மணியில் இருந்து 9:45 மணிக்குள் சட்டீபா எஸ்கே என்ற வீரர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதில் சக வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றொரு வீரர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. சட்டிபாவும் குண்டடிபட்டு உயிரிழந்து கிடந்தார்.

Latest Tamil News
அவர் தன்னை தானே சுட்டு கொண்டாரா அல்லது வீரர்கள் பதிலடியில் அவர் உயிரிழந்தாரா என விசாரணை நடந்து வருகிறது. மன உளைச்சல் காரணமாக அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எதற்காக அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.


இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிஎஸ்எப் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (4)

  • சம்பத் குமார் -

    1). Very unfortunate to hear about this incident. 2). வேலை நேரத்தில் இராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக யோகா, மனோவியல் பயிற்சி, குறுகிய கால விடுப்பு, மாதம் ஒருமுறை தனித்தனியாக கவுந்து ஆலோசித்தல் மற்றும் கனிவான அணுகுமுறை தேவைபடும் இடங்களில் ஆகியவற்றை நடைமுறை படுத்த வேண்டும்.3). இராணுவ வீரர்களுக்கான தங்குமிடம், உடை, பயிற்சி, உணவு ஆகியவற்றை நவீன முறைப் படுத்த வேண்டும். நன்றி வணக்கம் ஐயா.

  • S. Bharani - singapore,சிங்கப்பூர்

    உயிரை பணயம் வைத்து எல்லை காக்கும் வீரர்களை நாம் கண்டு கொள்ளவில்லை மாறாக ஏழாந்தர அரசியல் வியாபாரிகளும் எட்டாந்தர கூத்தாடிகளும் கொண்டாடப்படுகின்றனர் இந்த நிலை மாற வேண்டும் பணியில் மரணித்த வீரர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • Gopalakrishnan S -

    பல மாதங்களாக உடன் பிறந்தவர்கள், பெற்றோர், பெண்டு பிள்ளைகளை சந்திக்காமல், மிகக்குறைந்த வசதிகளுடன் கடுமையான வாழ்க்கை வாழும் நமது வீரர்கள், நமது அனுதாபத்திற்கு உரியவர்கள். மனோவியல் சிகிட்சை அவர்களுக்கு தொடர்ச்சியாக தரப்பட வேண்டும்.

  • Fastrack - Redmond,இந்தியா

    மனஉளைச்சல் ...சண்டை போடாமல் இப்படி ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement