Load Image
Advertisement

முன்னாள் அ.தி.மு.க, அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாள் நீதிமன்றகாவல்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தண்டையார் பேட்டை 49-வது வார்டில் மறு ஓட்டுப்பதிவு இன்று நடந்தது. இதில் கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை அதிமுகவினர் பிடித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர்.

தாக்கப்பட்ட நபர் தி.மு.க., நிர்வாகி என கூறப்படுகிறது. இதையடுத்து தி.மு.க.,வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 அ.தி.மு.க., வினர் மீது தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், என 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு ஜெயக்குமாரை கைது செய்து ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முரளிகிருஷ்ணா மார்ச் 7 வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.



Latest Tamil News15வது


இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஜெயக்குமார் கார் டிரைவர் தி.மு.க., வினர் மீது புகார் கொடுத்ததையடுத்து 10 தி.மு.க., வினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
ஜெயக்குமார் கார் டிரைவர் ஜெகநாதன் புகாரின் பேரில் திமுக.வை சேர்ந்த கொளஞ்சிநாதன், ஸ்ரீதர், சுதாகர் ஆகியோரை தண்டையார்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

பழனிசாமி கண்டனம்



அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான பழனிசாமி, கள்ள ஓட்டு போட முயன்ற திமுக நிர்வாகியை பிடித்து போலீசில் ஒப்படைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (28)

  • Raj - Chennai,இந்தியா

    கள்ள ஒட்டு போட்டவருக்கு நீதி அதை புகார் செய்தவர் ஜெயில் சூப்பர் விடியல்

  • Rajasekaran - chennai,இந்தியா

    பொங்கல் பரிசில் மிளகுக்கு பதில் பப்பாளி, பருத்தி விதை கலந்து கொடுத்தவர்கள் மீது நடவடிக்கைள் இல்லை. நல்ல விடியல்.

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    ஸ்டாலின்தான் வராரு நல்லாட்சிதான் தறாரு. அதுதான் அதுதான் மக்களோட விருப்பம்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    திமுக நிர்வாகி என்றால் கள்ள ஓட்டுப்போட உரிமை இருக்கிறதா?

  • Mohan - Thanjavur ,இந்தியா

    உங்கள் மீதுள்ள வழக்கு அவரை பிடித்ததால் அல்ல. அடித்ததால்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement