Load Image
Advertisement

தரமான கல்வி, திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்: மோடி

 தரமான கல்வி, திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்: மோடி
ADVERTISEMENT

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் தரமான கல்வியை உலகமயமாக்கல், திறன் மேம்பாடு உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து இணைய கருத்தரங்கு டில்லியில் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று துவக்க உரையாற்றினார். அவரின் உரை:

நம் நாட்டின் இளம் தலைமுறைதான் வருங்காலத் தலைவர்கள். ஆகையால், இளம் தலைமுறையினரை மேம்படுத்துவது இந்தியாவின் எதிர்காலத்தை மேம்படுத்துவதாகும்.

Latest Tamil News

தரமான கல்வியை உலகமயமாக்கல், திறன் மேம்பாடு, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு, இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவைக்கு மத்திய பட்ஜெட் 2022ல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த இந்த பட்ஜெட் உதவும். முன்னெப்போதும் எடுக்காத நடவடிக்கையாக தேசிய டிஜிட்டல் பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இடப் பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியும். டிஜிட்டல் பல்கலைக்கழகங்களை உடனடியாக தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.


வாசகர் கருத்து (8)

  • Venkat - Mumbai,இந்தியா

    நல்ல நடிப்பு ஜீ... நாளுக்கு நாள் உங்க பெர்பார்மன்ஸ் அதிகமாயிட்டே இருக்கு...

  • PothuManithan -

    இது எல்லா மக்களுக்குமான பட்ஜெட். ஏழைகளின் பட்ஜெட். பெரும்பான்மை மக்களுக்கான பட்ஜெட். புரிந்துகொள்ளாத கொஞ்சம் பேர் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

  • Sandru - Chennai,இந்தியா

    அணைத்து துறைகளிலும் தோல்வியை பதிக்க காரணமான நீங்கள் உடனடியாக பதவி விலகி மக்களுக்கு வாழ்வு கொடுங்கள்.

  • PRAKASH.P - chennai,இந்தியா

    Plan to sell all government University and education institutions to private .. correct?

  • Samathuvan - chennai,இந்தியா

    அப்படியா சூப்பரு சூப்பரு,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement