ADVERTISEMENT
சென்னை: தமிழகத்தில் உள்ள 5 வார்டுகளில் 7 ஓட்டுச்சாவடிகளில் நாளை மறு ஓட்டுப்பதிவு நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல், 5 வார்டுகளில் 7 ஓட்டுச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு நாளை(பிப்.,21) திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.
வார்டு எண் 179, ஓட்டுச்சாவடி எண். 5059 ஏவி- - ஓடைக்குப்பம், சென்ட் நகர்
2. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி
வார்டு எண் 17, ஓட்டுச்சாவடி எண் 17 டபிள்யூ
3. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி
வார்டு எண் 16 ஓட்டுச்சாவடி எண் 16 எம், 16 டபிள்யூ
4. திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி
வார்டு எண்.25, ஓட்டுச்சாவடி எண், 57 எம், 57 டபிள்யூ
![Latest Tamil News]()
இந்த 5 வார்டுகளில் உள்ள 7 ஓட்டுச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு பிப்.,21 திங்கட்கிழமை அன்று காலை 7 :00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும். கடைசி ஒரு மணி நேரம், அதாவது மாலை 5 மணி முதல் 6 மணிவரை கோவிட் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள். இந்த இடங்களில், வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாமை வைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல், 5 வார்டுகளில் 7 ஓட்டுச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு நாளை(பிப்.,21) திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.
மறு ஓட்டுப்பதிவு நடக்கும் இடங்கள்
1. சென்னை மாநகராட்சி
வார்டு எண் 179, ஓட்டுச்சாவடி எண். 5059 ஏவி- - ஓடைக்குப்பம், சென்ட் நகர்
2. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி
வார்டு எண் 17, ஓட்டுச்சாவடி எண் 17 டபிள்யூ
3. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி
வார்டு எண் 16 ஓட்டுச்சாவடி எண் 16 எம், 16 டபிள்யூ
4. திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி
வார்டு எண்.25, ஓட்டுச்சாவடி எண், 57 எம், 57 டபிள்யூ

இந்த 5 வார்டுகளில் உள்ள 7 ஓட்டுச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு பிப்.,21 திங்கட்கிழமை அன்று காலை 7 :00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும். கடைசி ஒரு மணி நேரம், அதாவது மாலை 5 மணி முதல் 6 மணிவரை கோவிட் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள். இந்த இடங்களில், வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாமை வைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (4)
மாநில தேர்தல் ஆணையம் மிகவும் நடு நிலையாக நடக்கிறது என்பதற்கு இதை விட சிறந்த சாட்சி வேண்டுமா?
தேர்தல் வெகு அமைதியாக நடந்தது என்று மார்தட்டிக்கொண்ட அரசியல்வாதிகளுக்கு இது ஒரு நெத்தி அடி. தர்மம் தலை காக்கும் என்பது தெள்ளத்தெளிவாகும்.
தமிழ்நாட்டில் தேர்தல் மிக அமைதியாக நடந்தது என்று புருடா விட்ட பெரிய பெரிய மனிதர்களே - அப்ப ஏன் மறு வாக்குப்பதிவு நடக்கிறது? சும்மா போராடிச்சுதா? எவன் அப்பன் வீட்டு காசில் மறு தேர்தல் நடக்குது? யார் இதற்கு காரணமோ, அவர்களிடம் இருந்து இந்த செலவு பணத்தை வாங்குங்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சோ, மற்ற இடங்களில் தேர்தல் நேர்மையாக நடைபெற்றது அப்படித்தானுங்களே ஊழல் ஸாரி நேர்மையான ஆபீஸர்ஸ்?