வெப்பநிலை குறைக்கப்படும்! அ.தி.மு.க., வாக்குறுதி; கிறுகிறுத்த வாக்காளர்கள்
சென்னை வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டில் தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., கணபதியின் மனைவி ஹேமலதா போட்டியிடுகிறார். இங்கு, அ.தி.மு.க., சார்பில் பகுதி செயலர் கந்தன் என்பவரது மனைவி சுமதி போட்டியிடுகிறார்.

இந்த வார்டில் தி.மு.க., - அ.தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருதரப்பினரும் வாக்குறுதிகளை அள்ளி வீசினர்.
'குப்பை இல்லாத, பிளாஸ்டிக் இல்லாத வார்டாக மாற்றுவேன். மாநகராட்சி இடங்களில் மரங்களை நட்டு, ஆக்ஸிஜன் அதிகரிக்கவும், வெப்பநிலையில், 14 சதவீதம் குறைக்கவும் முயற்சி செய்யப்படும்' என, அ.தி.மு.க., வேட்பாளர் சுமதி அளித்த அதிரடி வாக்குறுதி, எதிர்தரப்பினரை மட்டுமின்றி, அப்பகுதி மக்களையும் கிறுகிறுக்க வைத்தது.

வாசகர் கருத்து (18)
மொதல்ல ஒவ்வொரு மழைக்கும் வளசரவாக்கம் மோதக்குது அத்தை சரி செய்ய வாக்கு கொடுங்க. உள்ள ரோடு எதுவும் சரி இல்லை அதை சரி செய்ய வேண்டிய து தானே. இந்த வாட்டி MNM தான் ஜெயிக்க போறாங்க அங்க
இதில் நகைப்புக்கு என்ன இருக்கிறது? மரம் நடுவதால் வெப்பம் குறையும் என்ற அளவில் அறிவுடன் பேசியதே பெரிது. வெற்றி தோல்வி கிடக்கட்டும்
சைன்டிஃபிக்காக பேசும் சைட்டிஸ் சுமதி வெற்றி பெறுவாரா.
ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்துவேன் என்றும் சொல்வார்கள். 🤪🤪🤪
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ivarukku nobele kodukkalaam