இந்திய இசைக்குயில் மவுனமானது: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, பாலிவுட் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்க கடந்த ஜன., 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் மூலம் சுவாசித்து வந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

வாசகர் கருத்து (33)
இசை குயிலின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்...
இசைக்குயில் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துவிட்டபடியால் மனதிற்குள் இசைக்கிறது. தேசத்திற்கு பெருமை சேர்த்தவர். பாரத்தத்தின் ரத்தினம். நமது தேசத்த்தின் ஏறத்தாழ அனைத்து மொழிகளிலும் இசைத்த குரல். தமிழில் பேசிய மொழிகள் இன்றும் மழலையாய் யு டியூப் சேல்களில் கேட்கமுடிகிறது. ஒரு இசைக்கச்சேரியில் தமிழிலேயே பேசியதை கேட்டு ரசித்தவர்கள் ஏறலாம். என்பது வயதை கடந்தவர்களை கடவுளுக்கு ஒப்பானவர்களாக சொல்வார்கள். விருப்பு வேறுதிப்புற்று தனக்கென்று எதுவும் பாராமல் உலக செமத்திற்காக பிரார்த்திக்கும் மணமுடியவர்களாக இருப்பார்கள் அவர்கள். தொண்ணூறை கடந்தும் வாழ்வது இறைவன் அளித்தவரம். இன்று மிக சிறந்த நன்னாள். நிறைய கோவில்களில் சிவாலயங்களில் வருடாபிஷேகம் நடக்கும் நாள். உத்திராயணம் துவங்கி மாத காலம் நடந்து கொண்டிருக்கும் நாள். சிறந்த ஆத்மா கயிலாயம் செல்கிறது. வருந்துவதற்கு எதுவுமில்லை. போற்றத்தக்கவர். போற்றுவோம். கயிலாயம் அடையட்டும் நமது இந்தியாவின் இசைக்குயிலின் ஆத்மா. ஓம் சாந்தி
ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
மிகவும் வருத்தமாக உள்ளது .அன்னாரின் ஆன்ம இறைவனடி இளைப்பாற வேண்டுகிறேன்.
இந்திய இசைக்குயில் மறைவு இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி.