ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கைது: மக்கள் முற்றுகை
புதுக்கோட்டை-இலுப்பூர் பகுதியில், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர், கைது செய்யப்பட்டதை கண்டித்து, போலீஸ் ஸ்டேஷன் முன், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன், ஒரு மத அமைப்பைச் சேர்ந்த பெண்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கி மதப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கணேஷ்பாபு, 45, அவர்களை பிடித்து, போலீசில் ஒப்படைத்தார்.இந்நிலையில், அந்த மத அமைப்பினர், அந்த பெண்களை கணேஷ் பாபு அவமரியாதை செய்து, மொபைல் போன்களை பறித்துக் கொண்டதாக, இலுப்பூர் போலீசில் புகார் கொடுத்தனர்.
இதன்படி, கணேஷ்பாபு மீது, இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று, இலுப்பூர் போலீஸ் ஸ்டேஷன் முன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர்ஹெச்.ராஜா கூறியதாவது: 'மதமாற்றம் செய்யத் தான் வந்தோம்' என, அந்த பகுதிக்கு வந்த இரண்டு பெண்கள் கூறியுள்ளனர்.
அதற்கான ஆதாரங்கள் உள்ளது. அதனால், நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம்.கணேஷ் பாபு கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த பெண்கள் கொடுத்த பொய்யான புகார் மீது வழக்கு பதிவு செய்து, கணேஷ் பாபுவை கைது செய்துள்ளனர். தமிழகத்தில், ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளாக இருந்த ஈ.வெ.ரா., இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், தி.மு.க.,வினரும் தான் கலவரத்தை துாண்டுகின்றனர்; நாங்கள் அல்ல. தமிழக கவர்னரை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்தினால், அவர்களை அடித்து விரட்டுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!