விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் இல்லை
சென்னை; வரும் பிப்.,19ல் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் களம் இறங்குகிறது. தேர்தல் தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கம் சார்பில், மாநில தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்திருந்தால் மட்டுமே சின்னம் ஒதுக்க முடியும் எனக்கூறி, கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இரண்டு பெரிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒருவர் வந்து, ஜனநாயகம் மற்றும் சமூக நீதி காத்து, நியாயமான நல்லாட்சி தருவார் என்று விஜய் மக்கள் இயக்கத்தை எதிர்பார்த்தால், அவர்களோ நகராட்சி தேர்தலில், சில பகுதிகளில், ஆட்சியில் இருக்கும் தி.மு.க.-வுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது, விஜய் அவர்களின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்திருக்கும் அனைவருக்கும் ஏமாற்றமே. இதற்கு பதிலாக அவர் நேரடியாக தி.மு.க.-வில் இணைந்து விடலாம். சினிமாவில் நடிப்பது போல், பொது வாழ்வில் மக்களிடம் நடித்து அவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்று எண்ணம் கொண்டவர்களே பெரிய ஏமாற்றம் அடைய போகிறார்களே தவிர, மக்களல்ல..... வா.