திருப்பூர்: 'வேட்பு மனு படிவம் தமிழில் இல்லை' என்பதால் படிவம் பெற வந்தவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
திருப்பூர் மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் துவங்கியது. மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் வேட்பு மனு படிவம் வழங்கப்பட்டது.வேட்பு மனு படிவம், உறுதி மொழி படிவம், சொத்து, கடன்கள் குறித்த விவரம், வழக்குகள் குறித்த விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. படிவங்கள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது.
இதில், படிவம் -3ஏ வில், விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் பான் கார்டு மற்றும் வருமான வரித்தாக்கல் குறித்த விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதில், 3ஏ படிவம் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. நல்லுார் மண்டல அலுவலகத்தில் படிவம் பெற வந்த விண்ணப்பதாரர் ஒருவர் தமிழில் படிவம் வழங்க வேண்டும் எனக்கூறி, படிவம் வாங்க மறுத்து திரும்பி சென்றார். அங்கிருந்த ஊழியர்கள் பின்னர் தமிழ் படிவத்தை பிரதி எடுத்து வழங்கினர்.
தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'தமிழ் மொழி படிவம் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வந்துள்ளது. தமிழில் வேண்டும் என கேட்டால் மட்டுமே கொடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது,' என்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!