Load Image
Advertisement

எதிர்ப்புக்கு பணிந்தது எஸ்.பி.ஐ., வங்கி: கர்ப்பணிகளுக்கு வேலை குறித்த சுற்றறிக்கை வாபஸ்

 எதிர்ப்புக்கு பணிந்தது எஸ்.பி.ஐ., வங்கி: கர்ப்பணிகளுக்கு வேலை குறித்த சுற்றறிக்கை வாபஸ்
ADVERTISEMENT
புதுடில்லி: ஒரு பெண்ணின் கர்ப்ப காலம் 3 மாதங்களை கடந்திருந்தால் அவர் ஸ்டேட் வங்கியில் புதிதாக பணியமர்த்தப்பட மாட்டார். அதேபோல் , பதவி உயர்விலும் பரிசீலனை செய்யப்பட மாட்டார் என ஸ்டேட் பாங்க் அறிவித்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், அந்த வங்கிக்கு டில்லி பெண்கள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதனை தொடர்ந்து, இந்த உத்தரவை ஸ்டேட் வங்கி திரும்ப பெற்று கொண்டது. பொது மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிகளை வேலைக்கு தேர்வு செய்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிமுறைகளை கைவிடவும், இந்த விஷயத்தில் ஏற்கனவே உள்ள வழிமுறைகளை தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.


இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் டிச.,31 அன்று வெளியிட்ட புதிய விதிமுறைகளில், ஒரு பெண்ணின் கர்ப்ப காலம் 3 மாதங்களை கடந்திருந்தால் அவர் ஸ்டேட் வங்கியில் புதிதாக பணியமர்த்தப்பட மாட்டார். அதேபோல், கர்ப்பகாலம் 3 மாதங்களை கடந்திருந்தால் பதவி உயர்விலும் பரிசீலனை செய்யப்பட மாட்டார். அவர்கள், தற்காலிகமாக தகுதியவற்றவர்களாக கருதப்படுவார்கள். பணியில் சேர அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தால், பேறுகாலம் முடிந்த 4 மாதங்களுக்கு பின்னரே மருத்துவ ரீதியாக பணியில் சேர தகுதியானவராக கருதப்படுவார் என தெரிவித்திருந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஏராளமான எம்.பி.,க்கள் கடிதம் எழுதினர்.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஸ்டேட் பாங்க்கிற்கு டில்லி பெண்கள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அந்த நோட்டீசில், இந்த விதிமுறைகளை வகுத்ததற்கான நடைமுறைகள் என்ன? இதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்? அவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Tamil News

இது தொடர்பாக அந்த கமிஷனின் தலைவர் ஸ்வாதி மாலிவல் வெளியிட்ட அறிக்கையில், ‛‛ ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிக்கை பாரபட்சமானது. சட்டவிரோதமானது. பெண்களுக்கு எதிரான விதிமுறைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அந்த அந்த வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (13)

 • Honda -

  பெண்ணே பெண்ணுக்கு எதிரி பின்னால் இருந்து விளையாடுவதும் ஒரு பெண் தான்

 • M Ramachandran - Chennai,இந்தியா

  வேலைய கொடுப்பவன் சில கண்டிஷன் அவன் கம்பெனியின் லாபத்திற்கு போராட தான் செய்வான் இஷ்டம் யிருந்ததால் வேலைக்கு வா இல்லையேல் உன்வேலையை பார்த்து கொண்டு போ. எவ்வளவோர் வங்கிகளில் பின் பின் பெஞ்சில் ஆண்களும் களும் முன்னாள் கவுண்டர்களில் பெண்களும் வேலை செய்கிறார்கள்.அஙகு நடக்கும் செயல்களை கண்டால் வெறுப்பு வந்திடும். பத்து மணிக்கு வேலை நெறம் ஆரம்பிக்கும். ஆண்கள் எல்லாம் அவர்கள் இடத்தில் உட்க்காந்திருப்பார்கள். அப்போனது தான் வரும் பெண்கள் கைப்பையை அவர்கள் மேசை மீதி வைத்துவிட்டு ஒப்பனை ரூமிற்க்கு சென்று விட்டு ஒரு இருபது நிமிடங்கள் களைத்து வருவார்கள் வந்த வுடன் உடன் வேலை செய்யும் பென்ன்களுடன் குசலம் விசாரித்து அப்புறம் வேலைய செய்யு மிடத்தில் அமர்வார்கள். இவர்களுக்காக வாடிக்கையாளர்கள் அந்த சாளரத்தின் வழியாக காத்திருப்பார்கள். இவர்கள் காசோஆலையை வாஙகி சரி பார்த்து பிறகு பியூன் வழியாக ஆண்கள் வரிசைக்கு சம்பந்த பட்ட மேசைக்கு செல்லும். அவர்கள் காரியமுடித்து பிறகு பணம் பெற மறுபடியும் அந்த சாளரத்திற்கு வரும். டோக்கனை கொடுத்து உட்காரவைத்திருப்பார்கள். கிட்டத்தட்ட நாற்பத்தி ஐந்து முதல் ஒரு மனை நெறம் ஆகிவிடும். முதல் டோக்கன் காரருக்கு ஒரு மணிக்கு மேலும் எடுக்கும். இது போனற ஒழுங்கீனங்களை பெண்கள் வாரியம் பரிசீலிக்குக்குமா?

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  "முதலில் பெண்கள் அலுவலகப் பணிசெய்யத் தகுதியானவர்களா?" என்ற கேள்விக்கே இத்தகைய சர்ச்சைகள் இறுதியில் இட்டுச்செல்லும்

 • raja - Cotonou,பெனின்

  இதுக்கெல்லாம் சம்மன் அனுப்புங்க ஆனா ஒரு ஏழை பெண் லாவண்யா மதமாற்றத்தால் தற்கொலை செய்த்து கொண்டாள்... அத பத்தி கேக்காமா இப்போ கூட அமைதியா இருக்கீங்களே......இதுதான் தர்மமா....

 • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

  ஏழு மாத கர்ப்பிணியாக வேலைக்கு சேர்வார்கள் ..எட்டாம் மாதம் முதல் பேறுகாலம் முடிந்த ஓராண்டுக்கு சம்பளத்தோடு விடுப்பு ...ஆனால் இவர்களது விடுமுறை பணியிடத்துக்கு அடுத்த பதிலி ஊழியர் நியமிக்க படமாட்டார்....சக ஊழியர்களுக்கு வேண்டாத டார்ச்சர்...நிர்வாகத்துக்கு மேலதிக செலவு..... இவர்களுக்கு மூன்று மாதத்துக்கு மேலான பேறுகால விடுப்புக்கு சம்பளம் தேவையில்லை...இத்தனைக்கும் இவர்க்ளது கணவர்களும் வெல் டு டூ ஆசாமிகளாகத்தான் இருப்பார்கள்....ஒரு குடும்பத்தில் யாராவது ஒருவருக்கும் மட்டும் அரசு, அரசு சார்ந்த நிறுவன வேலை கொடுக்கப்பட வேண்டும்.... திருமணத்துக்குப்பிறகு, இரண்டு பேரில் யாராவது ஒருவர் அரசு பணியை கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும்..இல்லையென்றால், இவர்களின் அக்கப்போரை, பந்தாவை சமாளிக்க இயலாது......

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement