Load Image
Advertisement

கவுன்சிலர் தேர்தல் செலவு கட்டுப்பாடு சாத்தியமா? ஒரு கோடி ரூபாய் வரை செலவழிக்க பிளான்

Tamil News
ADVERTISEMENT
கோவை: மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுவோர், அதிகபட்சமாக, 85 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவிட வேண்டும் என, ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை, அரசியல் கட்சினர் விநோதமாக பார்க்கின்றனர்.

பிப்., 19ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்ட, வேட்பாளருடன் மூன்று பேரை மட்டும் அழைத்துச் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதனால், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - கம்யூ., உள்ளிட்ட கட்சியினர், தங்களது ஆதரவாளர்களை, தனித்தனி குழுக்களாக, பூத் வாரியாக பிரித்து, பிரசாரத்துக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கின்றனர்.

ஒரே நேரத்தில், ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக, 10க்கும் மேற்பட்ட குழுக்கள் ஆதரவு திரட்டும். அப்போது, அத்தியாவசிய தேவைக்காக மிகவும் சிக்கனமாக செலவழித்தாலும், சர்வ சாதாரணமாக, 2.5 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பது தனிச்செலவு என, கட்சியினர் கணக்குப் போட்டு வைத்திருக்கின்றனர். ஆனால், கவுன்சிலர் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், 85 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவிட வேண்டும் எனவும், செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், அடுத்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



Latest Tamil News

தேர்தலில் போட்டியிட தயாராக இருப்போர் சிலர் கூறியதாவது:வீடு வீடாகச் சென்று, வேட்பாளர்களின் முகத்தை, வாக்காளர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும். நோட்டீஸ் அச்சடிப்பது, ஆதரவாளர்களுக்கு டீ, ஸ்நாக்ஸ் சாப்பாடு உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். குறைந்தபட்சமாக, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகும். கட்சியினருக்கு பிரியாணி, மதுபாட்டில் என, தடபுடலாக கவனித்தால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவுக்குத் தேவைப்படும்.

கவுன்சிலராகி விட்டால் மண்டல தலைவர், நிலைக்குழு தலைவர் பதவியை கைப்பற்றினால், எளிதாக சம்பாதித்து விடலாம் என்றெண்ணி சிலர், 50 லட்சம் ரூபாய் வரையும், சிலர் ஒரு கோடி ரூபாய் செல வழிக்கவும் தயாராக இருக்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து (4)

  • RAJAN -

    seat வாங்குவதற்கே ஒரு கோடி கொடுக்கிறார்களே. ஜெயித்து வந்தால் எவ்வளவு கொள்ளை அடிப்பர்.

  • Rajan -

    சட்டசபை தேர்தல் வெற்றி பெற்ற விகிதாச்சார அடிப்படையில் கட்சிகளுக்கு கவுன்சிலர்களை நியமனம் செய்யலாம். எதற்கு தேர்தல் அடிதடி செலவு. அப்படி இருந்தாலும் ஆளும் கட்சிதான் முறைகேடு செய்து வெற்றி பெறும்.எனவே தேர்தல் வேஸ்ட்.

  • தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா

    யாரு ஒத்த ஒட்டு BJP யா என்ன SV SEKAR சொன்ன மாதிரி appove ஒரு MLA க்கு 13 கோடி அப்போ counciler ஒரு கோடி அப்பவும் குறையுது ,

  • Vivekanandan Mahalingam - chennai,இந்தியா

    எப்பொழுது எலெக்சன் ஒன்லைன் ல நடக்குதோ அப்போதான் இந்த பணம் கொடுப்பது நிற்கும் - பிரச்சாரத்திற்கு யாரும் செல்ல கூடாது என்று தடை விதிக்க வேண்டும் - பிரச்சாரம் ஒன்லைன் இல் மட்டும்தான் அனுமதிக்க வேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்