ADVERTISEMENT
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பாதிப்பில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.35 லட்சம் பேர் குணமடைந்தனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் வைரஸ் காரணமாக 2,35,532 பேர் பாதிக்கப்பட்டனர். 3,35,939 பேர் நலமடைந்தனர். 871 பேர் உயிரிழந்தனர்.
இதனால் வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,08,58,241 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,83,60,710 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,93,198 ஆகவும் அதிகரித்தது.
தற்போது 20,04,333 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி தொற்று உறுதியாகும் விகிதம் 13.39 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில், இதுவரை 1,65,04,87,260 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!