dinamalar telegram
Advertisement

துவக்க நாளில் வேட்புமனு பூஜ்யம்: அமாவாசைக்கு காத்திருக்கும் அரசியல் கட்சியினர்!

Share
கோவை: கவுன்சிலர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் நேற்று துவங்கிய நிலையில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் ஒருவர் கூட மனுத் தாக்கல் செய்யவில்லை. 'நல்ல நாளில்' களம் இறங்கலாம் என, கட்சி வேட்பாளர்கள் திட்டமிட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி, ஏழு நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. மாநகராட்சியில், 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, ஐந்து மண்டல அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. காலை, 10:00 முதல் மாலை, 5:00 வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.மனு தாக்கல் துவக்க நாளான நேற்று மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் வேட்புமனு தாக்கல் எதுவும் இல்லை.

இதேபோல் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று முதல் மனு தாக்கல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக மாநகராட்சி நான்கு மண்டலங்களில் நேற்று வேட்பு மனு படிவங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மட்டும், 316 பேர் மனு படிவம் வாங்கி சென்றனர். ஆனால், நேற்று ஒருவர் கூட மனுத் தாக்கல் துவங்கிய முதல் நாளில் மனுத் தாக்கல் செய்யவில்லை.


வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் மங்களகரமாக கருதி மனு தாக்கல் அதிகமாக இருக்கும். ஆனால், நேற்று ஒருவர் கூட தாக்கல் செய்யவில்லை. இன்று சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மனுத்தாக்கலுக்கு பிப்., 4ம் தேதி வரை அவகாசம் உள்ளது.வரும் 31ம் தேதி, (திங்கள்) அமாவாசை நாள் என்பதாலும், அதன்பின் வளர்பிறை நாள் என்பதாலும் அந்த இரு நாட்களிலும் மனுத்தாக்கல் செய்யலாம் என அரசியல் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், அந்த நாட்களில், வேட்புமனு தாக்கல் களை கட்டும்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (22)

  • Ravichandran K - Hosur,இந்தியா

    பெரியார் மண்.... மானமுள்ளவர்கள் விழித்துக் கொள்ளட்டும்

  • Aarkay - Pondy,இந்தியா

    பகுத்தறிவு பாசறை உபதேசமெல்லாம் ஊருக்குத்தான்

  • Balaji - Chennai,இந்தியா

    ஜெயாவினால் அதிமுக வெளிப்படையாக செய்தது.. தீம்கா கிளீனர் வழியில் எல்லாமே ஒளிவுமறைவாக செய்கிறது...

  • தத்வமசி - சென்னை ,இந்தியா

    திராவிட நாஸ்திகத்தில் அமாவாசையன்று நாள் பார்த்து ஜாதகம் பார்த்து வேட்பாளர்களை தேர்வு செய்வது, நல்ல நாள் பார்த்து விண்ணப்பம் வாங்குவது, கொடுப்பது, நல்ல நாளில் கடவுளை வணங்கி தேர்தல் பரப்புரையை துவங்குவது என்று சொரியானின் திராவிடம் தமிழகத்தை நாத்திகமாக மாற்றி விட்டது. இதற்கு ஆமாம் சாமி போடுவதற்கு கம்யுனிஸ்டுகள், கை தட்ட டோல்கேட் நாயகன் மற்றும் குஞ்சு குளுவான்களும் உண்டு. சில துண்டுகளை தூக்கிப் போட்டால் எடுத்துக் கொண்டு ஓடோடி விடும் வகையை சார்ந்தவை இந்த திராவிட சார்புகள். நாத்திகத்தின் முக்கிய ஓட்டு வங்கி ஒரு பக்கம் முஸ்லிம்கள் மறு பக்கம் பாவாடைகள். ஆக தமிழகத்தை நாத்திக மயமாக மாற்றிவிட்ட பெருமை கருணாநிதி குடும்பத்தைச் சாரும். பேஷ். பேஷ். பலே. பலே. சும்மா நாத்திகம் அதிருதுல்ல.

  • S. Narayanan - Chennai,இந்தியா

    கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் வாக்காளர் பதிவு செய்யலாம்.

Advertisement