dinamalar telegram
Advertisement

மேஜையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு சமாதான பேச்சு: ரஷ்யா பற்றி அமெரிக்கா

Share

மாஸ்கோ: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடு, மேஜை மீது துப்பாக்கியை வைத்துக்கொண்டு சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்ததாக கூறுவது போல் உள்ளது என ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதர் ஜான் சல்லிவன் தெரிவித்தார்.


உக்ரைனில் ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் வசிக்கின்றனர். அந்நாட்டை தங்கள் கைப்பிடியில் வைத்திருக்க ரஷ்யா விரும்புகிறது. உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் நெருக்கமாக செல்ல விரும்புகிறார். அவர்களது நேட்டோ கூட்டமைப்பிலும் இணைய திட்டமிடுகிறார். அதன் மூலம் நேட்டோ படைகள் உக்ரைனில் வந்தால் ரஷ்யாவுக்கு சிக்கல் ஏற்படும்.


இதனை அச்சுறுத்தலாக கருதி உக்ரைன் எல்லையில் ஆயிரக்கணக்கானோர் கொண்ட படைகளை அனுப்ப ரஷ்யா தயார் நிலையில் உள்ளது. இதனால் அப்பிராந்தியத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் செயல்பாடு பற்றி அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் ஜான் சல்லிவன் கூறியதாவது: போரை விரும்பவில்லை என ரஷ்யா கூறுகிறது.


ஆனால் ராணுவ போர் பயிற்சி என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்களை குவிப்பது அசாதாரணமானது. பேச்சுவார்த்தைக்கு என வந்துவிட்டு மேஜை மீது துப்பாக்கியை வைத்துக்கொண்டு அமைதியை விரும்புகிறேன் என்பது அச்சுறுத்துவதாகும். ரஷ்ய அரசு அதன் சொல்லுக்கு உண்மையாக இருக்கும், உக்ரைனை ஆக்கிரமிக்க திட்டமிடாது என நம்புகிறோம். ஆனால் ஆக்கிரமிக்கும் திறன் அதற்கு உள்ளது என்பதே உண்மை.உக்ரைன் பிரச்னையில் பேச்சுவார்த்தைக்கு திட்டமிடுதல் குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ அனுப்பிய எழுத்துப்பூர்வ ஆவணங்களுக்கு, ரஷ்யாவின் பதிலை வாஷிங்டன் எதிர்பார்க்கிறது. மேலும் உக்ரைனின் எல்லைகளுக்கு அருகிலிருந்து ரஷ்யா தனது துருப்புகளை திரும்பப் பெற வேண்டும்.


உக்ரைனுக்குள் ஊடுருவினால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பது என்பது மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கையில் ஒரு பகுதி மட்டுமே. ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது, ரஷ்யாவிலிருந்து ஜெர்மனுக்கு செல்லும் இயற்கை எரிவாயு குழாயின் செயல்பாட்டை நிறுத்துவது போன்ற நடவடிக்கையும் இருக்கும். என கூறினார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

 • Sampath Kumar - chennai,இந்தியா

  துப்பாக்கி கலாசாரத்தை கொண்டு வந்ததேய இந்த எழவு எடுத்த அமெரிக்காதான் இப்போ புத்தர் வேஷம் போடுது அங்கிள் சாம் உங்க பழைய கதையை புத்தாயி பாருங்க

 • Sivagiri - chennai,இந்தியா

  பாடி வீராப்பா இருந்தாலும் , மூஞ்சீல அந்த பயம் தெரியுது . . . சிறிய ஆப்கானிஸ்தானில் , இராக்கில் இறங்கி, இருக்க முடியாமல் பின்வாங்கியது , இப்போதைய காலத்தில் அமேரிக்கா யாரு மீதும் பொருளாதார தடை போட முடியாது - போட்டால் பெருநஷ்டம் அமெரிக்காவுக்குத்தான் என்பது அவர்களுக்கே தெளிவாக தெரியும் . . .

 • Nallappan - Singapore,சிங்கப்பூர்

  தக்காளி சட்னி நிறைய இடத்தில் உதவுது.. பாகிஸ்தான் காரன் சுட்டுக் கிட்டே இருக்கான் தீவிரவாதிகளை அனுப்பிச்சிக்கிட்டே இருக்கான் ஆனால் உலகமே எங்களிடம் அமைதியா பேச்சு வார்த்தை நடத்துங்கனு சொல்லலை...

 • RK -

  உக்ரைன் மக்கள் விருப்பப்படி விடுவதே சிறந்தது. ரஷ்யா வீணாக உலக அமைதியை கெடுக்க வேண்டாம். ஏற்கனவே மூர்க்கர்கள் இருக்கிற நாடுகள் எல்லாம் அவர்களாகவே சண்டையிட்டு அமைதியை கெடுக்கிறார்கள்...!!!.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்