dinamalar telegram
Advertisement

நகராட்சி, பேரூராட்சிகளில் 30 கேமராக்கள் பொருத்தம்

Share
Tamil News
பெரியகுளம்- -பெரியகுளம் தாலுகாவில் நகராட்சி, பேரூராட்சிகளில் புதிதாக 30 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.பெரியகுளம் நகராட்சி,தென்கரை, தாமரைக்குளம், வடுகபட்டி ,தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பேரூராட்சி அலுவலகங்களில் நேற்று வேட்புமனு பெற தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர். மாநில தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில் பெரியகுளம் நகராட்சியில் 10 கேமராக்கள், பேரூராட்சிகளில் தலா 4 கேமராக்கள் வீதம் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அலுவலக பயன்பாட்டில் இருந்த கேமராக்கள் தவிர, தேர்தல் கமிஷன் அலுவலகத்தின் முக்கிய இடங்களில் கேமராக்களை பொருத்தியுள்ளது. இதன் மூலம் அலுவலக வளாகத்தில் யார் வருகின்றனர், அவர்களின் உடல் மொழி, உள்ளிட்டவைகளை பதிவாகிறது. இதனை தேர்தல் கமிஷன் நேரில் கண்காணித்து வருகிறது.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • நலவிரும்பி -

    அனைத்து காமிராக்களும் கடைசிவரை வேலை செய்ய வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்

Advertisement