மதுரை -'ஆளுங்கட்சி, எதிர்கட்சி பாகுபாடின்றி நேர்மையான முறையில் உள்ளாட்சித்தேர்தலை நடத்த வேண்டும்,' என, மதுரையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியினர் பேசியதாவது...சசிராமன், பா.ஜ.,: வேட்பாளர்களுக்கு தடையில்லா சான்று வழங்குவதில் பராபட்சம் காட்ட கூடாது. விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும்.ராஜரத்தினம், பா.ஜ.,: பிரசாரத்திற்கு மைக் கட்டுவது, பேனர் வைப்பது உள்ளிட்ட விஷயங்களில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடு காட்ட கூடாது. நேர்மையான முறையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.சேதுராமன், அ.தி.மு.க.,: வேட்பாளர்கள் கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் எந்த நிலுவையும் வைக்கவில்லை என்ற தடையில்லா சான்று பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனு தாக்கலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும்.சங்கரன், அ.தி.மு.க.,: கூடுதல் ஜாவிதா அரசியல் கட்சியினருக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மார்க்சிஸ்ட் பிரதிநிதி: தேர்தல் அனுமதி வழங்குவதில் ஒற்றை சாரள முறையை அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் நேரம் வீணாவதை தவிர்க்கலாம்.மணிகண்டன்(காங்.,), காளிதாஸ்(இ. கம்யூ.,) உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பங்கேற்றனர். கட்சியினர் தெரிவித்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
நேர்மையான முறையில் உள்ளாட்சித்தேர்தலை நடத்த வேண்டும்,' அப்படீன்னா என்ன பாஸ்