Load Image
Advertisement

தி.மு.க.,வில் உச்சகட்ட போட்டி: மேயர் நாற்காலி ஆசை!

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர்:திருப்பூர் மேயர் பதவியை கைப்பற்ற தி.மு.க.,வில், பலத்த போட்டி நிலவுகிறது.திருப்பூர் மாநகராட்சி தோற்றுவிக்கப்பட்டதும், அப்போது நகராட்சி சேர்மனாக இருந்த செல்வராஜ் (தற்போது தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,) முதல் மேயராக பொறுப்பேற்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில், தெற்கு தொகுதியில், செல்வராஜ் வெற்றி பெற்றார். சட்டமன்ற தேர்தல் நடந்தது முதலே, மேயர் கனவில், தி.மு.க.,வை சேர்ந்த சிலர் இருந்து வருகின்றனர்.

மேயர் வேட்பாளர் பட்டியலில், தெற்கு நகர செயலாளர் நாகராஜ், வடக்கு நகர செயலாளர் தினேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், வடக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.நாகராஜ், எம்.எல்.ஏ., செல்வராஜின் தீவிர விசுவாசி. நீண்ட காலமாக கட்சியில், அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறார். தொ.மு.ச.,வில் மாநில பொறுப்பும், தான் வகித்த நகர செயலாளர் பொறுப்பையும் செல்வராஜ் அவருக்கு பெற்றுத் தந்தார்.

நாகராஜ் மீதான புகார்கள் கட்சித் தலைமைக்குச் சென்ற போது கூட அதை சமாளித்து செயலாளர் பதவியில் அமர வைத்தார். நாகராஜை பொறுத்தவரை இதுவரை தேர்தல் அனுபவம் இல்லை. தினேஷ்குமார் முன்னர் தே.மு.தி.க.,வில் மாவட்ட பொறுப்பில் இருந்தவர். மேயர், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., தேர்தல்களில் போட்டியிட்ட அனுபவம் உள்ளவர். செல்வராஜ் அழைப்பை ஏற்று தி.மு.க.,வில் இணைந்தவர். கட்சியில் இணைந்து நீண்ட காலம் எந்த பொறுப்பும் வழங்காத நிலையிலும் தீவிரமாக கட்சி பணியாற்றினார். தே.மு.தி.க., வினரை அதிகளவில் தி.மு.க.வில் கொண்டு வந்து சேர்த்துள்ளார்.

கோவிந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்; அனுபவசாலி. தொ.மு.ச.,வில் மாநில பொறுப்பில் உள்ளார். மா.கம்யூ.,வில் இருந்து தி.மு.க.,வில் இணைத்து கொண்டவர். ராமதாஸ் வேலம்பாளையம் பகுதி செயலாளராக உள்ளவர். நீண்ட கால கட்சி நிர்வாகி. மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் இல்லாத நிலையிலும், கட்சியினர் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்.

வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பத்மநாபன், அமைச்சர் சாமிநாதனின் தீவிர ஆதர வாளர். மாநகராட்சியில் 10 வார்டுகள், கட்சியில் இவரது தலைமையின் கீழ் உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன், இவர் தனது சொந்த ஊரிலிருந்து, மேயருக்கு போட்டியிடும் எண்ணத்தில், திருப்பூருக்கு வந்துள்ளார். இதுதவிர செல்வராஜின் உறவினர்கள் சிலரும், மேயராகும் ஆசையுடன் உள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement