பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மோஸ் ஏவுகணை விற்பதன் வாயிலாக சீனாவுக்கு இந்தியா நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்சுக்கு ஏவுகணை விற்பது பற்றி பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது:வர்த்தக பாதுகாப்புக்காக பிரம்மோஸ் ஏவுகணையை விற்பதாக, ராணுவ அமைச்சகம் கூறினாலும், இது சீனாவுக்கு இந்தியா வைக்கும், 'செக்' என்றே கூற வேண்டும்.இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கையிலுள்ள சில துறைமுகங்களை, சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. இவ்விரு நாடுகளின் பொருளாதாரத்திலும், தன் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டது.
இதற்குப் பதிலடியாகத் தான், சீனாவுக்கு அருகிலேயே பிரம்மோஸ் ஏவுகணையை நிலைநிறுத்த, இந்தியா காய் நகர்த்தியுள்ளது. இந்தியா ஏற்கனவே, அருணாச்சல பிரதேசம், லடாக்கில் சீன எல்லை ஒட்டிய பல இடங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகளை நிறுத்தி உள்ளது.
வியட்நாம், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும், இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை விரைவில் வாங்கும் என, எதிபார்க்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஸ்ரீலங்கா சீனாவில் கைப்பிடியில் பாகிஸ்தான் போன்று அழிந்துவருவதை ஏற்கமுடியவில்லை. மதிகெட்டால் இப்படித்தான்.