தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 26,533 ஆக குறைந்துள்ளது : 28,156 பேர் நலம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,533 பேருக்கு கோவிட் உறுதி செய்யப் பட்டு உள்ளது. 48 பேர் உயிரிழந்துள்ளனர். 28,156 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 28,515 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 26,533 ஆக சற்று குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,45,376 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 26,533 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,79,284 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,13,46,285 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 15,579 பேர் ஆண்கள், 10,954 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 19,12,481 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 13,66,765 ஆகவும் அதிகரித்து உள்ளது. 28,156 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,29,961 ஆக உயர்ந்துள்ளது.
48 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 24 பேரும் , அரசு மருத்துவமனையில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,460 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,591 ஆக இருந்த நிலையில் இன்று (ஜனவரி 28 ம் தேதி) 5,246 ஆக சற்று குறைந்துள்ளது.
மாவட்ட வாரியாக விபரம்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!