dinamalar telegram
Advertisement

சூப்பர்மார்கெட்டுகளில் ஒயின் விற்க அனுமதி: விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகுமாம்

Share
மும்பை: மஹாராஷ்டிர அரசு சூப்பர்மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனை செய்ய அனுமதித்துள்ளது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதன் மூலம் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என காரணம் கூறியுள்ளார் சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்.

மஹாராஷ்டிர அரசு நேற்று (டிச., 27) மாநிலம் முழுவதும் உள்ள சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் இதர பெரிய கடைகளில் 5,000 ரூபாய் ஆண்டு உரிமக் கட்டணத்தில் மதுவை விற்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்திய ஒயின் தயாரிப்பாளர்களுக்கு அதிகளவில் சந்தைப்படுத்தல் வாய்ப்பை உறுதி செய்வது நோக்கம் என அமைச்சரவை தெரிவித்தது.

இம்முடிவை பா.ஜ.க., தலைவரும், மஹா., முன்னாள் முதல்வருமான பட்னாவிஸ் கடுமையாக எதிர்த்துள்ளார். மஹாராஷ்டிர மாநிலத்தை மது மாநிலமாக மாற்ற சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி விரும்புகிறது என்றார். இதற்கு பதிலளித்துள்ள சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத், 'ஒயின் மதுபானம் கிடையாது. ஒயின் விற்பனை அதிகரித்தால் விவசாயிகள் பயனடைவார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இதைச் செய்துள்ளோம்.' என புதுவகையான விளக்கம் அளித்துள்ளார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

  • R Ravikumar - chennai ,இந்தியா

    நம்ம ஊருல தான் அதிகம் ப்பைத்தியம் இருக்கு னு நினச்சேன் . இது நம்பர் ஒன்னு டூபாக்கூரு போல .

  • பேசும் தமிழன் -

    இவர்கள் எல்லோரும் சேர்ந்து... பால் தாக்கரே அவர்களின் பெயரை கெடுக்காமல் விட மாட்டார் கள் போல???

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    எப்பா என்ன ஒரு புரட்சி மகாவின் பெரியார் இவர் என்று இன்று முதல் அழைக்கலாமா?

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    "......இதன் மூலம் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என காரணம் கூறியுள்ளார்...." என்ன எழவைச் சொன்னாலும் நம்ப வேண்டியது மக்களின் தலையெழுத்து.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    சிவசேனா ஒரு திமுகாவாக மாறிவிட்டது.

Advertisement