Load Image
Advertisement

மூக்கு வழியாக பூஸ்டர் தடுப்பு மருந்து: பாரத் பயோடெக்கின் பரிசோதனைக்கு அனுமதி

 மூக்கு வழியாக பூஸ்டர் தடுப்பு மருந்து: பாரத் பயோடெக்கின் பரிசோதனைக்கு அனுமதி
ADVERTISEMENT

புதுடில்லி: பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மூக்கு துவாரம் வழியாக பூஸ்டர் தடுப்பு மருந்தை செலுத்தும் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு இந்திய பொது மருந்துக் கட்டுப்பாட்டாளர் அனுமதி தந்துள்ளார்.


கோவிட் வைரஸ் உருமாறி தடுப்பூசியின் செயல்திறனை குறைப்பதால் பூஸ்டர் டோஸ் மூலம் நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கின்றனர். இந்தியாவில் பூஸ்டர் டோஸ் ஜனவரி 10 முதல் வழங்கப்படுகிறது. நோய் பாதிப்புக்கு அதிக ஆபத்துள்ள நபர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒமைக்ரான் போன்ற புதிய உருமாறிய வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்பு ஆபத்து ஏற்படாது.

Latest Tamil News
இந்நிலையில் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், மூக்கு வழி செலுத்தும் கோவிட் தடுப்பு மருந்துக்கான பரிசோதனைக்கு கடந்த மாதம் அனுமதி கோரியிருந்தது. நாட்டில் 9 இடங்களில் பரிசோதனை நடத்துவதற்கான அனுமதியை மருந்து கட்டுப்பாட்டாளர் வழங்கியுள்ளார்.

Latest Tamil News
பிபிவி154 என்ற இந்த தடுப்பு மருந்தை தொற்று ஏற்படும் இடமான மூக்கில் செலுத்துவதன் மூலம், தொற்றை தடுப்பதில், பரவாமல் இருக்கவும் சிறப்பாக செயல்புரியும் என்கின்றது பாரத் பயோடெக். மேலும், மூக்கு வழி மருந்து என்பதால் இதனை செலுத்த பயிற்சி பெற்ற செவிலியர்கள் தடுப்பூசி முகாம்களில் இருக்க வேண்டிய அவசியமிருக்காது என்கின்றனர்.


வாசகர் கருத்து (3)

  • RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்

    குடிக்கிற சிரப் மாதிரி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டால் , இல்லை விழுங்குவதற்கு எளிதான குளிசை கண்டு பிடித்தால் மிக சிறப்பு , அணைத்து மக்களுக்கும் விரைவில் கொண்டு சேர்க்க இயலும்

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    நல்லவேளை இப்போது திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதி இல்லை. இப்ப அவர் இருந்திருந்தா ஓமிக்றான் வைரஸை வைத்து ஒரு இரண்டாயிரம் கோடிகளை விஞ்ஞான முறையில் எங்குமே நிரூபிக்கமுடியாதபடி ஆட்டையை போட்டு தனது குடும்பத்திற்கு சொத்து சேர்த்திருப்பார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்