dinamalar telegram
Advertisement

ராஜிவ் கொலையாளி முருகனுக்கு பல் சிகிச்சை

Share
Tamil News
வேலுார்: ராஜிவ் கொலையாளி முருகனுக்கு வேலுார் அரசு மருத்துவமனையில் பல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக முருகனுக்கு பல் வலி இருந்தது. இதற்கு சிகிச்சை அளிக்க அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இன்று காலை 9:00 மணிக்கு வேலுார் அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் முருகன் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு பல் வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் பிற்பகல் 12:00 மணிககு மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக முருகன் காவி உடையில் வலம் வந்த நிலையில் வெள்ளை வேட்டி சட்டையில் மருத்துமவனைக்கு வந்தார்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    பரோலில் சென்றவர்களெல்லாம் சிறைக்கு திரும்பி வந்து விட்டார்களா?...

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    பொங்கல் இலவச பொருட்கள் இவர் வாங்கினாரா?

Advertisement