லக்னோ: பாக்., தேசத் தந்தை முகமது அலி ஜின்னாவின் ஆதரவாளர் அகிலேஷ் யாதவ் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. கடந்த கால ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ., முதல்வர் யோகி ஆதித்யநாத் மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த முறை யோகியிடம் இழந்த ஆட்சியை தற்போது மீண்டும் கைப்பற்ற சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் களத்தில் இறங்கியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு கட்சியினர் போட்டியிட்டாலும் அகிலேஷ்-யோகி ஆகிய இருவருக்குமே கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரசாரங்களின்போது இருவரும் மாறிமாறி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தற்போது யோகி ஆதித்யநாத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஹிந்தியில் அகிலேஷ் குறித்து விமர்சித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அகிலேஷ் யாதவ் பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்படும் ஜின்னாவின் ஆதரவாளர் என்றும் தான் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆதரவாளர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சமாஜ்வாடி கட்சிக்கு பாகிஸ்தான் நெருங்கிய தொடர்புடைய நாடு என்றும் ஆனால் தனது தலைமையிலான உத்தரபிரதேச பா.ஜ., அரசு அன்னை பாரதத்தின்மீது பற்று கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. கடந்த கால ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ., முதல்வர் யோகி ஆதித்யநாத் மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த முறை யோகியிடம் இழந்த ஆட்சியை தற்போது மீண்டும் கைப்பற்ற சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் களத்தில் இறங்கியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு கட்சியினர் போட்டியிட்டாலும் அகிலேஷ்-யோகி ஆகிய இருவருக்குமே கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரசாரங்களின்போது இருவரும் மாறிமாறி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தற்போது யோகி ஆதித்யநாத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஹிந்தியில் அகிலேஷ் குறித்து விமர்சித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்னும் கொஞ்சம் முன்னால போங்க. அகிலேஷின் முப்பாட்டனாரின் கொள்ளுப் பாட்டனார் அவ்ரங்கசீபின் உளவாளின்னு அடிச்சு உடுங்க. அலாவுதீன் கில்ஜி , மாலிக்காபூர் குத்புதின் ஐபெக் இவ்ங்களுக்கும், அகிலேஷுக்கும் தொடர்புன்னு சொல்லுங்க.