கடந்தாண்டு பெய்த கூடுதல் மழையால்... 31 மாவட்டங்களில் நிலத்தடி நீர் உயர்வு
கோவை: தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து ஒவ்வொரு மாதமும் பொதுப்பணித் துறையினர் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். கண்காணிப்பு கிணறுகளில் இம்மாதம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மட்டும், 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் நிலத்தடி நீர் மட்டம் சரிவை சந்தித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் உயர்ந்துள்ளது.
வேலுாரில் 3.69 மீட்டர், தர்மபுரியில் 4.47, திருச்சியில் 3.43, ஈரோட்டில் 3.29, கோவையில் 1.18, திருப்பூரில் 2.47, நீலகிரியில் 0.46 மீட்டர் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. திண்டுக்கல்லில் 2.97 மீட்டர், மதுரையில் 0.95, ராமநாதபுரத்தில் 0.35, சிவகங்கையில் 1.84, தேனியில் 2.27, விருதுநகரில் 2.40, திருநெல்வேலியில் 2.30, தென்காசியில் 2.68, கன்னியாகுமரியில் 0.80 மீட்டரும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது.

கடந்தாண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரு பருவங்களிலும் பெய்த கூடுதலான மழை காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாசகர் கருத்து (2)
இயற்க்கைக்கு நன்றி கூறவேண்டும், எப்படி எப்படியோ கடலுக்கு அனுப்பியும் நிலத்தடியில் சேர்ந்திருக்கிறது என்றால் பாராட்டுக்கள் வந்தே மாதரம்
திமுக மட்டும் ஆட்சியில் இல்லை என்றால் எல்லாத்தண்ணீரும் கடலுக்குள் சென்று கடல் மட்டத்தைத்தான் உயரித்தியிருக்கும் - உபிஸ்