dinamalar telegram
Advertisement

இந்தியாவில் மேலும் 3.47 லட்சம் பேர் கோவிட்டிலிருந்து குணம்

Share
Tamil News
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3.47 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,51,209 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,06,22,709 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 3,47,443 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,80,24,771 ஆனது. தற்போது 21,05,611 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவிட் காரணமாக 627 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,92,327 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 164.44 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 57,35,692 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement