dinamalar telegram
Advertisement

12 ராசிகளுக்கான வாரபலனும் பரிகாரமும்

Share
Tamil News
வெள்ளி முதல் வியாழன் வரை ( 28.1.2022 - 3.2.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்

மேஷம்
சுக்கிரன், புதன். குரு சாதக நிலையில் உள்ளனர். சிவன் வழிபாடு நலம் அளிக்கும்

அசுவினி: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு விஷயம் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க சற்று பாடுபட வேண்டியிருக்கும். உங்கள் குடும்ப நிதிநிலைமை சீர்படும்.

பரணி: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். புது வேலை கிடைக்கும். நீங்கள் மிக மதிக்கும் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

கார்த்திகை 1ம் பாதம்: பணியிடத்தில் உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். பழைய கடனை முடிவுக்குக் கொண்டு வர உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நல்லவர்களின் நட்பால் நன்மை ஏற்படும்.

ரிஷபம்
புதன், சுக்கிரனால் நற்பலன் உண்டாகும். குரு வழிபாடு நிம்மதி அளிக்கும்.
கார்த்திகை 2,3,4: பணியிடத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயர்வீர்கள். உத்வேகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீ்ர்கள். உறவினரிடம் இருந்து சாதகமான செய்தி வரும். குடும்பத்தில் குதுாகலம் இருக்கும்.

ரோகிணி: தாயாருடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் நண்பர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்து சம்மந்தமாக உறவினரிடமிருந்து இனிக்கும் செய்தி வரும்.

மிருகசீரிடம் 1,2: நீண்ட காலம் பார்க்க நினைத்த ஒருவரைச் சந்திப்பீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவசிய, அநாவசிய செலவுகள் ஏற்படும். உடலில் உபாதைகள் வந்து நீங்கும்.

சந்திராஷ்டமம்: 28.1.2022 இரவு 2:42 மணி - 31.1.2022 அதிகாலை 5:11 மணி.

மிதுனம்
குரு, ராகு, கேது, புதன் நன்மைகளை வழங்குவர். ராமர் வழிபாடு நன்மை தரும்.

மிருகசீரிடம் 3,4: நீங்கள் மதிக்கும் நபர் ஒருவர் உங்களைத் தேடி வருவார். உறவினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

திருவாதிரை: மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு லாபம் உண்டு. பயணங்களால் நன்மை கிடைக்கும். நெருங்கிய நண்பருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள் தொழிலில் புதிய முடிவுகள் எடுப்பீர்கள்.

புனர்பூசம் 1,2,3: தடைகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் வார மத்தியில் கிடைக்கும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு பாசத்துடன் நடப்பர். பெரியவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்: 31.1.2022 அதிகாலை 5:11 மணி - 2.2.2022 காலை 8:37 மணி.

கடகம்
செவ்வாய், ராகு அனுகூல பலன் தருவர். குரு வழிபாடு அமைதி தரும்.

புனர்பூசம் 4: நற்பெயர் காண்பீ்ர்கள். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பெண்களுக்குத் தாயாரால் நன்மை ஏற்படும். விருந்தினர் வருகைக்காக காத்திருக்க நேரிடும்.

பூசம்: ஓரிரு நன்மைகள் நடக்கும், குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும். எதிலும் முழுப்பலனை அடையச் சில நாட்கள் ஆகும்.

ஆயில்யம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் இருதக்கும். பணவரவு போதுமானதாக இருக்கும். மனநிறைவு ஏற்படும். வியாபார வளர்ச்சி சுமாராக இருக்கும். மாணவர்கள் கவனமுடன் படிப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: 2.2.2022 காலை 8:37 மணி - 4.2.2022 பகல் 1:49 மணி.

சிம்மம்
குரு, சுக்கிரன், புதன் அதிர்ஷ்ட பலன்களை தருவர். சூரியன் வழிபாடு சிரமம் நீக்கும்.

மகம்: அழகும் இளமையும் கூடுவதால் கவர்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுத் தொடர்பு ஏற்படும். தைரியமான, அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும்.

பூரம்: பணியிடத்தில் நீங்கள் உழைத்ததை விடவும் கூடுதலாகவே அங்கீகாரம் கிடைக்கும். திருப்பங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரித்துப் புகழ் கூடுதலாகும்.

உத்திரம்1: தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, சலுகைகள் அதிகரிக்கும். அரசு வகையில் நன்மை கிடைக்கும். மகிழ்ச்சி தரக்கூடிய செலவுகள் ஏற்படும். வியாபாரம் சீராக இருக்கும்.


கன்னி
கேது, சந்திரன் புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

உத்திரம் 2,3,4: நீங்கள் எதிர்பாராத பெரிய இடத்திலிருந்து உதவி கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். உறவினர் சிலருக்கு கேட்ட உதவியை செய்து மனம் நெகிழ வைப்பீர்கள்.

அஸ்தம்: புதிய முதலீடு செய்ய வேண்டாம். பணியிடத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் முன்பைவிடக் கூடுதலாய்க் கிடைக்கும்.

சித்திரை 1,2: அரசு வகையில் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அழகிய, புது வாகனம் வாங்குவீர்கள். பங்குச்சந்தை வர்த்தகத்தில் சறுக்கல் வராதிருக்க அதை சில நாட்களுக்கு பொறுமை காப்பது நல்லது.

துலாம்
குரு, செவ்வாய், சந்திரன் நற்பலன்களை அளிப்பர். திருமகள் வழிபாடு சுபிட்சம் அளிக்கும்.

சித்திரை, 3,4: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விட்டு கொடுப்பதன் மூலம் சில வேலைகளை முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வம்பில் ஈடுபட வேண்டாம்.

சுவாதி: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கியத் தீர்வு கண்டு, நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைவீர்கள். பகைக்குடும்பங்கள் நட்பாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

விசாகம் 1,2,3: கணவன், மனைவிக்கிடையே நிலவிக்கொண்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். பாராட்டுக்கிடைப்பதால் மகிழ்வீர்கள். கலகலப்பான சூழல் நிலவும். பொழுது போக்கு அதிகரிக்கும்.


விருச்சிகம்
சனி, சுக்கிரன், சந்திரன், புதன் நற்பலன் தருவர். அம்மன் வழிபாடு நிம்மதி தரும்.

விசாகம் 4: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். மகிழ்ச்சியான செய்திகள் வரும். கடந்த சில வாரங்களாக இருந்த சோர்வுகள் நீங்கி உற்சாகத்துடன் உங்கள் வேலையைப் பார்ப்பீர்கள்.

அனுஷம்: ஏற்கனவே செய்த தப்பான ஊகங்கள் மாறும். பேச்சில் மட்டும் சற்று கவனமாக இருங்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள்.

கேட்டை: தவறு செய்பவர்களைத் தட்டி கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். புது இடத்திற்கு மாறுவீர்கள்.

தனுசு
சந்திரன், ராகு, கேது, புதன் தாராள நற்பலன்களை வழங்குவர். சனிபகவான் வழிபாடு நலம் தரும்.

மூலம்: உயர் பதவியில் இருக்கும் நண்பரின் உதவி கிடைக்கும். அதனால் சில விஷயங்கள் நல்ல படியாக முடியும். மாமன்வழி உறவுகளால் மகிழ்ச்சி, ஆதாயம் உண்டு.

பூராடம்: வாழ்வில் முன்னேற அனுபவசாலிகள் வழிமுறைகளைச் சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் வாரம். சுபச் செய்திகள் வந்து சேரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

உத்திராடம்,1: எடுத்த முயற்சி வெற்றிபெறும். குடும்ப நலனுக்காகச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கைத்துணைக்கு இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். புதிய சலுகைகள் கிடைக்கும்.

மகரம்
கேது, குரு, புதன் நன்மை கிடைக்கும். அனுமன் வழிபாடு வளம் தரும்.

உத்திராடம் 2,3,4: தொண்டை வலி சரியாகி நிம்மதி காண்பீர்கள். பயணங்கள்பலன் தருவதாக அமையும். யாரிடமுமே பக்குவமாகப் பேச வேண்டியது அவசியம்.

திருவோணம்: மனதுக்கு நெருக்கமானவர்களுடனானே புரிதல் அதிகரிக்கும். எண்ணங்கள் ஓரிரு தடை தாமதங்களுக்குப் பின் நிறைவேறும். குடும்பத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். எதிர்பார்த்த நன்மைகள் நிதானமாக நடக்கும்.

அவிட்டம் 1,2: பயணங்களால் அசதியும் சலிப்பும் ஏற்படாமல் கவனமாக இருங்கள். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக செலவு செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டில் சந்தோஷம் நிலவும்.

கும்பம்
செவ்வாய், புதன், சுக்கிரனால் நன்மை கிடைக்கும் ராமர் வழிபாடு அமைதி தரும்.

அவிட்டம் 3,4: எதிர்பார்த்த நன்மைகள் தாமதத்துக்குப் பிறகே கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வதற்கு முன் நன்றாக யோசியுங்கள். பெற்றோரின் தேவையை நிறைவேற்றுவீ்ர்கள்.

சதயம்: பணியிடத்தில் அனைவரும் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் வாரம். வியாபாரிகள் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மகிழ்ச்சியான மனநிலை காரணமாக உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

பூரட்டாதி 1,2,3: பல நாள் எதிர்பார்த்த தொகை ஒன்று கைக்கு வரும். உங்களால் உதவி பெற்ற சிலரே உங்களைக் கண்டு கொள்ளாதிருப்பது கண்டு வருத்தப்பட வேண்டாம். ரகசியங்களை வெளியில் சொல்லாமலிருப்பது நல்லது.

மீனம்
சூரியன், சந்திரன், சனி நற்பலன்களை வழங்குவர் குரு வழிபாடு சிரமம் தீர்க்கும்.

பூரட்டாதி 4: பொறாமையை மனதிற்குள் அண்ட அனுமதிக்காதீர்கள். எதிர்பாராத நபர்களிடமிருந்து வரும் பாராட்டு வியப்பூட்டும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் வாரம். நிறைய உழைப்பீர்கள். அதற்கேற்ப ஊதியம் உண்டு.

உத்திரட்டாதி: திருமணம் போன்ற சுபவிஷயங்களின்பொருட்டுக் கடன் தருவீர்கள். அரசாங்கத்தின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயார் மற்றும் தாய்வழி சொந்தங்கள் ஆதரவு காட்டுவார்கள்.

ரேவதி: தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிப்பதால் உங்கள் நிலையில் உள்ளவர்களை விட முன்னேற்றம் காண்பீர்கள். குதுாகலமான வாரம். வேலைப்பளு அதிகம் இருக்கும்.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

    மேலே உள்ள வார ராசி பலனில் ஏறக்குறைய எல்லாருக்கும் ஒரே மாதிரியான, பொதுவான பலன்களே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே மாற்றம் என்னவென்றால், வழிபடவேண்டிய தெய்வங்கள் பெயர் மட்டும் மாறி உள்ளது.

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் யார் யாருக்கு எதை எதை கொடுக்கவேண்டுமோ அதை கொடுத்தால் எல்லாமே நல்லதாக விளங்கும், இதுதான் உலக நடப்புக்கு பரிகாரம், ஜோசியத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மன்னிக்கவும், வந்தே மாதரம்

Advertisement