Load Image
dinamalar telegram
Advertisement

பெண்ணை மதம் மாற்றி திருமணம்; எஸ்.பி., ஆபீசில் பெற்றோர் புகார்

திருப்பூர்: 'தாராபுரத்தில், 18 வயது இளம்பெண்ணை சிலர் கடத்தி சென்று, மதமாற்றம் செய்து திருமணம் செய்து அடைத்து வைத்துள்ளனர்' என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், சொக்கநாதபாளையத்தை சேர்ந்த 18 வயது, கல்லுாரி மாணவி சமீபத்தில் மாயமானார். அவரை வேறு மதத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலிப்பதாக அழைத்து சென்று கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ளதாக புகார் எழுந்தது.

Latest Tamil News

இதுதொடர்பாக, மாணவியின் பெற்றோர் திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்துக்கு புகார் அளிக்க வந்தனர். மாணவியின் பெற்றோர் கூறியதாவது:எங்கள் மகள் தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 24ம் தேதி கல்லுாரிக்கு புறப்பட்டு சென்றார். அன்றைய தினம், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் ஸ்டேஷனில் இருந்து போலீசார் அழைத்தனர்.

உங்களது மகள் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு வந்துள்ளார் என்று கூறி, விசாரணைக்கு போலீசார் அழைத்தனர். ஸ்டேஷனுக்கு சென்றபோது, 'உங்கள் மகளை, அசாருதீன் என்பவர் திருமணம் செய்துள்ளார்' என போலீசார் தெரிவித்தனர். எனது மகளை மிரட்டியோ அல்லது மூளைச்சலவை செய்தோ கடத்தி சென்று கட்டாய மத மாற்றம் செய்து, எங்கோ அடைத்து வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக, தாராபுரம் மகளிர் ஸ்டேஷன், திருப்பூர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். தற்போது, திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தால், மனுவை வாங்க மறுக்கின்றனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து மகளை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (43)

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    பெண்ணின் சம்மதம் இல்லாமல் கடத்தி கல்யாணம் செய்து எத்தனை நாள் வைத்திருக்க முடியும்?

  • Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்

    விடியல் ஆட்சியின் சாதனைகள் தொடருகிறது, இதற்குத்தானே வோட்டுப்போட்டீர் இப்போ ஏன் அழுகின்றீர்

  • S.Pandiarajan - tirupur,இந்தியா

    கூப்பிடுங்க ப்பா அண்ணாமலையை அடுத்த ஆட்டத்துக்கு

  • சாம் -

    திராவிட ஊடகங்கள் கப்சிப்... தன் குடும்பத்தில் நடந்தால் கூட ... தமிழ் நாட்டை ஆண்டவன் கூட காப்பாத்த முடியாது...

  • DVRR - Kolkata,இந்தியா

    இந்த ஆட்சி உடனே கலைக்கப்படவேண்டும். ஆட்சி கலைத்து விட்டு அந்த கட்சி Derecognise செய்யப்பட வேண்டும் தேர்தல் ஆணையத்தினால். மேலும் இப்போது இந்த கட்சியில் இருக்கும் அணிஅவரையும் Anti Hindus sect என்று அவர்கள் ஆதார் கார்டில் பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்து இன்னும் 20 வருடத்திற்கு இவர்கள் இந்தியாவின் எந்த தேர்தலில் நிற்க தகுதியயர்றவர்கள் என்று அறிவிக்க வேண்டும்.

Advertisement