கடலுார்-கடலுார் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்.19ம் தேதி நடப்பதையொட்டி, வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது.
கடலுார் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளுக்கு தேர்தல், வரும் பிப்., 19ல் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 447 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவித்ததால் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் மாலையே அமலுக்கு வந்தது.
மேலும், வேட்பு மனு தாக்கல் இன்று (28 ம் தேதி) துவங்குகிறது. காலை 10:00 மணி முதல் மாலை 5:00 வரையில் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. அந்தந்த மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடலுார் மாநகராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலராக கமிஷனர் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மாநகராட்சி வளாகத்தில் தனித்தனி அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறுகின்றனர். மனு தாக்கல் இன்று துவங்குவதையொட்டி, மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முதல், வேட்பு மனுக்கள் பெறும் அலுவலகம் வரை 25 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூட்டத்தை கட்டுப்படுத்தி, போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக பேரிகார்டுகள் (தடுப்புக்கட்டைகள்) தயார் நிலையில் உள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் அமைதியாக, பாதுகாப்பாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் தொடர்பாக புகார்களை தெரிவிக்க, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 04142 284562 என்ற தொலைபேசி எண்ணிலும், அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களை தொடர்பு கொண்டும் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!