
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
* கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் வரும் 15 ம் தேதி நீட்டிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வந்த இரவு நேர ஊரடங்கு நாளை (28 ம் தேதி) முதல் ரத்து செய்யப்படுகிறது. அதே போன்று ஜன. 30 ம் தேதி ஞாயிறு முழு ஊரடங்கு விலக்கி கொள்ளப்படுகிறது.
* மேலும் பிப்.1 முதல் ஒன்றாம் வகுப்பு 12ம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகள் நடத்தப்படும். கொரோனா கட்டுப்பாட்டு மையமாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு தனியார் பல்கலைகழகங்கள், கல்லூரிகள், தொழிற் பயிற்சி மையங்கள் ஒன்றாம் தேதி முதல் செயல்பட அனுமதி .
* துணிகடைகள் நகைகடைகள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி , உடற்பயிற்சி கூடங்கள் , யோகா பயிற்சி மையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
*திருமணம் திருமணம் சார்ந்த நிகழ்ச்சியில் அதிகபட்சம் 100 வரை பங்கேற்க அனுமதி
*அழகு நிலையங்கள், சலூன் கடைகள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி
* உணவு விடுதிகள், பேக்கரி அடுமணை உள்ளிட்ட இடங்களில் வாடிக்கையாளர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் அமர்ந்து உண்ண அனுமதி
*நீர்விளையாட்டுக்களை தவிர்த்து பொழுது போக்கு பூங்கா 50 சதவீத பேருடன் செயல்பட அனுமதி
*உள்அரங்கில் நடத்தப்படும் கருத்தரங்கள் இசையரங்கள் உள்ளிட்டவை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம்.
*தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி
* வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயில் தரிசனத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம். பிப்.1 முதல் கோயில்களில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

*இறப்பு போன்ற நிகழ்சிகளில் கலந்த கொள்ள 50 பேர்களுக்கு மட்டுமே அனுமதி
*சமுதாய, அரசிலயல் கட்சிகள் போனறவற்றின் கூட்டங்களுக்கான தடை நீட்டிப்பு
மழலையர் விளையாட்டு பள்ளிகள் நர்சரி பள்ளிகள் செயல்பட தடை விதிப்பு
அடுத்து தமிழ் புத்தாண்டு சமயத்தில் முழு அடைப்பை அரசு அறிவிக்கும்