Load Image
dinamalar telegram
Advertisement

பிப்., முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு?

Tamil News
ADVERTISEMENT
சென்னை: தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பிப்.,1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால், பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வரும், 31ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுத் தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பிப்ரவரி முதல் பள்ளிகளை திறக்கலாமா என, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

Latest Tamil News
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், 10,11,12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை துவங்க அனுமதி கேட்டிருக்கிறோம். அதேநேரத்தில் மற்ற மாநிலங்களில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதேபோல் தமிழகத்திற்கும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளோம்.


நவ., முதல் வாரத்தில் தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அப்போதில் இருந்து கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினோம். சுழற்சி முறையில் இல்லாமல் வழக்கமான முறையில் தான் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.


எங்களை பொறுத்தவரை பாட திட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்பது தான் சவாலாக உள்ளது. பள்ளிகளை திறந்த பின் வழக்கமான பாடங்கள் நடத்தப்படும். பிப்ரவரி முதல் வாரத்தில் பள்ளிகளை துவங்க முதல்வர் அனுமதி வழங்கினால், மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து (13)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    இது முதல்வரின் வழிகாட்டுதலின் படிதானுங்களே அன்பில்?

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    ஒரு மாதத்தில் பாடத்திட்டத்தை முடிக்க முடியுமா ? எனக்கு புரியவில்லை , இளம் சிறார்களின் , வருங்கால தமிழக வாரிசுகளை வைத்து பகடை காயாக்கி கூண்டு எலிகளாக்கி விளையாடும் இந்த விளையாட்டு தேவையா? வோட்டு போட்ட மக்களே நீங்களாவது கேள்வி கேளுங்க

  • VASEEGARAN - BANGALORE,இந்தியா

    கொரோனா இன்னும் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு புதுசு புதுசா உரு மாறி வரத்தான் செய்யும். இப்படியே மூடி வெச்சுகிட்டு இருந்தா விளங்கிடும். ரோட்ல திரியறப்ப வராத கொரோனா, ஸ்கூலுக்கு காலேஜ்க்கு, போனா வந்துடுமா? இன்னும் எத்தனை காலத்திற்கு தான் ஆன்லைன் எக்ஸாம் வெச்சு பசங்கள புக் பார்த்து எழுத வெச்சு நாசகதி ஆக்க போறாங்களோ தெர்ல. ஒரு தலைமுறையே படிக்காம புக் பார்த்து எழுதி காலேஜ் முடிச்சுட்டானுங்க. டென்த் டு காலேஜ் வர எக்ஸாம் இல்லாமலே போறானுங்க. இதுக்கு பேசாம ஒரு ஐஞ்சு வருஷம் ஒரே அடியா ஸ்கூல் காலேஜ இழுத்து மூடிட்டு போங்க. படிச்சவர் ஆட்சி நடத்தறப்பவே இந்த லட்சணம். பழனிசாமி ஆட்சி தான் அப்படினா இது அதுக்கு மேல இருக்கு.

  • K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா

    ஐயா, முதல்வர் அவர்களே, முதலில் இந்த பள்ளி கல்வி அமைச்சர் அவர்களை மாற்றுங்கள். ஒரு நடவடிக்கை எடுத்தால் ஸ்டடியாக அறிவிக்க வேண்டும். அதை விடுத்து விளம்பரம் செய்வது போல் தினசரி ஒரு அறிக்கை கூடாது.

  • ThiaguK - Madurai,இந்தியா

    உலக ரசிகர் மன்ற தலைவரே வணக்கம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்