Load Image
Advertisement

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விவகாரம்; வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி

Tamil News
ADVERTISEMENT
சென்னை: குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது ரிசர்வ் வங்கியின் ஊழியர்கள் சிலர் எழுந்திருக்காமல் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.


சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. வங்கியின் மண்டல இயக்குநர் சுவாமி தேசியக் கொடியேற்றி உரையாற்றினார். விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது வங்கி ஊழியர்கள் சிலர் எழுந்து நிற்கவில்லை. நிகழ்ச்சி முடிந்த பின் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்து நிற்க மறுத்தவர்களிடம் சிலர், 'ஏன் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்திருக்கவில்லை' என கேள்வி எழுப்பினர்.

Latest Tamil News
அதற்கு அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்றம் கூறியதாக தெரிவிக்க இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வங்கி உயர் அதிகாரிகள், 'தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிப்பது உறுதி செய்யப்படும்' என தெரிவித்தனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னையில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.


இந்நிலையில், தமிழக நிதியமைச்சர் தியாகராஜனை சந்தித்த, ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது ஊழியர்கள் சிலர் எழுந்திருக்காமல் அமர்ந்திருந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.


வாசகர் கருத்து (93)

  • Godyes - Chennai,இந்தியா

    ஒரு நாளைக்கு எழுந்து பாடி விட்டால் போதுமா. எலி மெண்டரி பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை ஜனகனமன நீராரும் கடலுடுத்த தினமும் பாட வேண்டும்.

  • ponssasi - chennai,இந்தியா

    தமிழக நிதியமைச்சர் தியாகராஜனை சந்திக்க வந்த , ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனரை சந்திக்காமல் திருப்பி அனுப்பியிருக்கவேண்டும்.

  • HONDA -

    .....

  • HONDA -

    இன்னுமா அவர்களை வேலையை விட்டு நிரந்தரமாக நீக்கவில்லை

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

    விடியல் அரசு ஒன்றும் செய்யாது.....ஊழியர் சம்பளத்துக்கு ஓவர் டிராஃப்டுக்கு ,ஃபோர்ட் கிளாஸிஸ் -க்கு தானே போக வேண்டும்? அப்போது அவர்கள் வேலையை காட்டினால், திமுக அரசின் டப்பா டான்ஸ் ஆடிப்போகும்.......

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்