Load Image
Advertisement

விடுதலை நாளை துக்க தினம் என்றவருக்கு அலங்கார ஊர்தியா? கொந்தளித்த சமூக ஊடகம் !

சென்னை: தமிழகத்தில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற அலங்கார ஊர்தியில், விடுதலையை துக்க தினமாக அறிவித்த ஈ.வெ.ரா.,வுக்கு முகப்பில் சிலையா என எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக பலரும் தங்களது விமர்சனத்தை, கோபத்தை, கிண்டலை சமூக வலைதளங்களில் காட்டியதால் இவ்விஷயம் தேசிய அளவில் டிரெண்டானது.

Latest Tamil Newsஎப்போதும் இல்லாத வகையில் இம்முறை தமிழகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் மீது கவனம் குவிந்தது.

டில்லியில் உள்ள அலங்கார ஊர்திகள் தேர்வு குழு, தமிழக அரசின் அலங்கார ஊர்தியை தேர்வு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அந்த அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனால் அலங்கார ஊர்திகள் பேசுபொருளானது. அதன்படி நேற்றைய(ஜன.,26) குடியரசு தின விழாவில், டில்லி நிகழ்ச்சியில் தேர்வாகாத வ.உ.சி., பாராதியார், வேலுநாச்சியார் மற்றும் கோயில் கோபுரம் அடங்கிய அலங்கார ஊர்தி அணிவகுத்தது.

Latest Tamil News

அதனைத் தொடர்ந்து 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற தலைப்பிலான அலங்கார ஊர்தி இடம்பெற்றது. அதில் இந்திய விடுதலைக்காக தமிழகத்திலிருந்து பங்கெடுத்த தலைவர்களான காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காயிதே மில்லத், ராஜாஜி ஆகியோர் சிலைகள் இருந்தது.

மேலும் அந்த ஊர்தியின் முகப்பில் ஈ.வெ.ரா., கைத்தடியுடன் நடைபோடுவது போன்ற சிலையும் இடம்பிடித்தது. அப்புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையானது. மேலும் குடியரசு தின ஊர்தியில் சுதந்திர தின ஆண்டான 75ஆம் ஆண்டை குறிப்பிட்டிருந்தது எதிர்க்கட்சிகளால் கிண்டல் செய்யப்பட்டது.

நாடு விடுதலையடைந்த சமயத்தில் அதனை துக்க தினமாக தனது தொண்டர்களுக்கு அறிவித்தவரை குடியரசு தின அணிவகுப்பில் சேர்க்கலாமா என பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பினர்.


'நாட்டின் பிற மாகாணங்களுக்கு விடுதலை அளியுங்கள், ஆனால் சென்னை மாகாணத்தை நீங்களே ஆளுங்கள்' என லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அரசுக்கு கடிதம் எழுதிய ஈ.வெ.ரா.,வை, ஏதோ சுதந்திர போராட்டத்தையே தலைமை ஏற்று நடத்தியவர் போல அதிக முக்கியத்துவம் தந்து அலங்கார ஊர்தி முகப்பில் வைத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்கின்றனர். சுதந்திர தின விஷயத்தில் ஈ.வெ.ரா.வின் துக்க நாள் நிலைப்பாட்டை அவருடன் பயணித்த அண்ணாதுரையே எதிர்த்து இன்பநாள் என அறிக்கை வெளியிட்டார். அதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார் என்பது வரலாறு என சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், அரசின் இச்செயலை கடுமையாக கிண்டலடித்து ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது.
அதில் ஒரு லட்சத்திற்கும் மேல் பதிவுகள் இடம்பெற்று தேசிய அளவிலும் டிரெண்டானது. 'ஊசி கூட தயாரிக்க முடியாது இந்தியாவால்' என கூறியவருக்கு ஊர்தி எதற்கு என ஒருவர் கேட்டுள்ளார். மேலும் ஈ.வெ.ரா.பின்புறம் கருப்பு நிறக் கொடிகள் பறக்கவிட்டிருப்பதையும் கண்டித்துள்ளனர்.


வாசகர் கருத்து (117)

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  கர்நாடக வழி தோன்றல் சென்னை மாகாணத்தை இங்கிலாந்துக்காரரே ஆளட்டும் என்று ஏன் சொன்னாரோ வெள்ளைக்காரன் தான் அவர் சொந்தக்காரர்னு நினைச்சிட்டார் போலிருக்கு. இவர் இப்படி சொல்வதற்கு தான் கட்டபொம்மன் போன்றவர்கள் தூக்கு கயிற்றை தழுவினார்களா?...இருந்தாலும் நிரூபிக்க இளைய தலைமுறைக்கு அறிவிக்க தினமலர் பழைய திக நாளிதழை தேடி வெளியிட்டது பாராட்டுக்குரியது. திக கொடியிலே கருப்பு தான் எனக்கு புடிச்ச கலர்னு ஒரு நிறம் தான் இருக்கும் ,,,இரண்டு நிறம் தெரியுது.

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  சென்னை ராஜ்தானியை மட்டுமாவது அவர்கள் ஆட்சிக்கு கீழ் வைத்துக்கொள்ளுமாறு ஆங்கிலேயர்களிடம் மன்றாடியவர்களின் வழித்தோன்றல்களுக்கு திடீரென்று வேலு நாச்சியார், மருது பாண்டியர், கட்டபொம்மன் வ வு சி நினைவெல்லாம் வந்து அரசியல் செய்ய கிளம்பி இருப்பது ஒரு தமாஷ் அந்த மாமனிதர்களை மத்திய அரசு அங்கீகரிப்பது இருக்கட்டும் முதலில் இவர்களது அரசின்கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களது பாடப் புத்தகங்களில் அவர்களது சரித்திரத்தை இடம்பெறச் செய்திருக்க்கிறார்களா என்பதை ஆய்வு செய்தால் நிறைய உண்மைகள் வெளிப்படும்

 • RandharGuy - Kolkatta,இந்தியா

  தினமலருக்கு நன்றி.. படத்தை வெளியிட்டதற்கு ....

 • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

  ;;;;;;;;;

 • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

  ஒண்ணுமே இல்லாத வெங்காயம் என்று சொல்லுபவர்கள் ஏன் இந்த கதரு கதறுகிறார்கள் என்று புரியவில்லை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement