கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில், எஸ்.பி.,செல்வகுமார் முன்னிலையில் கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின், காவல் துறையினரின்அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கலெக்டர் எஸ்.பி., இருவரும் மூவர்ண வண்ண பலுான்கள் மற்றும் வெள்ளைபுறாக்களை பறக்க விட்டனர்.தொடர்ந்து, காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 25 போலீசாருக்கு முதல்வர் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்கள் 181 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற போலீசாருக்கு கேடயங்களையும் வழங்கினார்.முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 25 ஆயிரம் மதிப்பில் வருடாந்திர பராமரிப்பு மானியம் மற்றும் தலைமைச் செயலரின் கொடிநாள்பாராட்டுச் சான்று, பதக்கம் 4 பேருக்கும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், மொபைல், காதொலி கருவி, ஆர்பிட் ரீடர் என 11 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் விதவை உதவித் தொகை 10 பேருக்கும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 13லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை 5 பேருக்கும் வழங்கப்பட்டது.சமூக நலன் மற்றும்மகளிர் உரிமைத்துறை சார்பில் 3 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பில் திருமண உதவித்தொகை 25ஆயிரம் ரூபாய் மற்றும் 8 கிராம் தங்கம் வீதம் 5 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.மேலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 14ஆயிரத்து 613 ரூபாய் மதிப்பீட்டில் 3 பேருக்கு சலவைப்பெட்டி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் 7,000 ரூபாய் மதிப்பில்2 பேருக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டது.தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிப்பம் கட்டும் அறை மானியம் 2 பேருக்கும் வழங்கப்பட்டது.விழாவில், 42 பயனாளிகளுக்கு 27 லட்சத்து 80 ஆயிரத்து 613 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளைகலெக்டர் வழங்கினார்.
விழாவில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தமிழ்நாடு சர்க்கரை ஆலை இணைய தலைவர் ராஜசேகர், மாவட்ட ஊராட்சிக்குழு துணைசேர்மன் தங்கம், ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், ஆர்.டி.ஓ., சரவணன், திட்டஇயக்குனர் மணி, சி.இ.ஓ., விஜயலட்சுமி, நகராட்சி கமிஷனர் குமரன், ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஜவஹர்லால், சுப்பராயன், விஜயகார்த்திக் ராஜா, டி.எஸ்.பி.,க்கள் ராஜலட்சுமி, பாலசுப்ரமணியன், சுரேஷ், ரவிச்சந்திரன், காவியா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!