கடலுார்-கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த 73வது குடியரசு தினவிழாவில் கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் தேசிய கொடியை ஏற்றி, சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
நாட்டின் 73வது குடியரசு தினவிழா கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று எளிமையாக கொண்டாடப்பட்டது. கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் காலை 8.05 மணிக்கு எஸ்.பி., சக்திகணேசன் முன்னிலையில், தேசியக் கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சமாதான புறாக்கள் மற்றும் மூவர்ண பலுான்களை பறக்கவிட்டார்.மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி ஏகாம்பரம் இல்லத்திற்கு சென்று அவருக்கு, கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.கொேரானா நோய்தடுப்பு காரணமாக சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசு தாரர்கள் அந்தந்த பகுதி தாசில்தார்கள் மூலம் கவுரவிக்கப்பட்டனர்.தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை காவல் துறையை சேர்ந்த 86 பேருக்கு அணிவித்தார். ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் அலுவலர்கள் 4 பேர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் 10 பேர், சிதம்பரம், நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலர்கள் 2 பேர், மாவட்ட காவல் துறையில் 19 பேர், முதல் நிலை அலுவலர்கள் 3 பேர், கலெக்டர் அலுவலகத்தில் 4 பேர், ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்கள் கடலுார் 7 பேர், சிதம்பரம் அலுவலகத்தில் 9 பேர், விருத்தாசலம் அலுவலகத்தில் 6 பேர், சமூகபாதுகாப்பு திட்டத்தில் ஒருவர், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 20பேர், தீயணைப் புத்துறையில் 3 பேர், முன்னாள் படைவீரர் நலத்துறையில் ஒருவர், நில அளவை பதிவேடுகள் துறையில் 3 பேர், கால்நடை பராமரிப்புத்துறையில் 2 பேர், அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒருவர், வேளாண் துறையில் 3 பேர் உட்பட 135 பேருக்கு கலெக்டர் பதக்கங்களை வழங்கினார்.
சிறப்பாக பணிபுரிந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பாரிதாஸ், ராமானுஜம், கோபி, திலீபன்ராஜ், செல்வமணி ஆகியோருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.கொேரானா பரவலையொட்டி, விழாவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. குறைந்த அளவிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் மட்டுமே பங்கேற்றனர்.
வழக்கம்போல் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.காவல்துறை அணிவகுப்பிற்கு ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையேற்று நடத்தினார். கூடுதல் கலெக்டர் பவன்குமார், நேர்முக உதவியாளர் டெய்சிகுமார், ஆர்.டி.ஓ., அதியமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குடியரசு, சுதந்திர தினமெல்லாம் மக்களுக்கு இல்லாமலே போயிடுச்சு. அடிச்சு, முடக்கி ஆட்சியாளர்களும் போலீசும் மட்டுமே கொண்டாடும் இனிய நாள்.