dinamalar telegram
Advertisement

டவுட் தனபாலு

Share
Tamil News
மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்: மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும். அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், அதிக கூட்டம் உள்ள இடங்களில் பங்கேற்பதை தவிர்ப்பது போன்றவற்றை, வரும் மூன்று வாரங்களுக்கு முழுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே குறைக்க முடியும்.


டவுட் தனபாலு: நம்ம மக்கள் ஒத்துழைப்பு அளிச்சிருந்தா, ரெண்டாவது, மூணாவது அலைகள் வந்திருக்குமா... ஞாயிறு ஊரடங்குன்னா, சனிக் கிழமையே காசிமேட்டுலயும், தி.நகர்லயும் கூட்டம் கூட்டமா குவிஞ்சா, தொற்று எப்படி குறையும்ங்கிறேன்... மொத்தமா ஊரடங்கு போட்டா தான் இவங்க திருந்துவாங்க... இதுல, 'டவுட்'டே இல்லை...!


தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி:
தமிழ் மொழி வளமையின் முழுப் பயனையும், நம் நாடு பெற வேண்டும். அதே நேரத்தில் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல், நம் பள்ளி மாணவர்களும், பிற இந்திய மொழிகளைப் படிக்க வேண்டும். பிற இந்திய மொழிகளின் அறிவை, நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது அவ்வளவு சரியில்லை.


டவுட் தனபாலு: இப்ப என்ன சொல்ல வர்றீங்க... ஹிந்தியை எல்லாரும் கத்துக்கணும்னு வெளிப்படையா சொன்னா, தையா, தக்கான்னு நம்ம அரசியல்வாதிகள் குதிப் பாங்கன்னு தான், இப்படி சுத்திவளைச்சு மூக்கை தொடுறீங்க... இதுல, எங்களுக்கு, 'டவுட்'டே இல்லை...!


தமிழக முதல்வர் ஸ்டாலின்:
சூரியன் என்று சொன்னாலே அது சக்தி தான். சூரியன் என்ற சொல்லையும், சக்தி என்ற சொல்லையும் யாராலும் பிரிக்க முடியாது. நான் அரசியல் பேசுவதாக யாரும் கருத வேண்டாம்; அது தேவையுமில்லை. சூரிய சக்தியை உருவாக்கும் மையத்தை நான் குறிப்பிடுகிறேன்.



டவுட் தனபாலு: உங்க உவமானம் சரி தான்... ஆனா, சந்திரன்கிற ஒரு ஒளி தமிழகத்துல இருந்தவரைக்கும், இந்த சூரியன் மேகத்துல தானே மறைஞ்சுகிடந்தது... நான் சொல்றது, எம்.ஜி.ராமச்சந்திரன்கிற ஒளியை... இதுல, உங்களுக்கு ஏதாவது, 'டவுட்' இருக்குதா...?
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    முதலில் அமைச்சர், முக்கியமாக 'இளையவர்' வரும் இடங்களில் நெறுக்கியடிக்கும் கூட்டம், அதிமுக ரெயிடு 'விருந்து' கலீல் கூடும் சாப்பாட்டு பந்துகள் இந்தப்பக்கம் யாரும் கண்ணைக்கூட திருப்பவில்லையே அவர்களெல்லாம் 'மக்கள்' கணக்கில் வரமாட்டார்களா?

Advertisement