புதுடில்லி: குடியரசு தினவிழாவில் முதல்முறையாக வானில் 75 விமானங்கள் அணிவகுத்து வீர சாகசம் நிகழ்த்தியுள்ளன.
நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லி ராஜபாதையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார். பின்னர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தியும் அணிவகுத்தன.
இந்த ஆண்டு ராஜபாதையில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக வானில் 75 போர் விமானங்கள் அணிவகுத்து வீர சாகசம் நிகழ்த்தின. பழமையான விமானங்கள் தொடங்கி இன்றைய நவீன ரபேல், சுகோய், ஜாகுவார் எம்ஐ-17, சாரங், அப்பாச்சி, டகோட்டா விமானங்கள் மூலம் ராஜபாதையின் மேலே சாகசம் நடத்தின.
நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லி ராஜபாதையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார். பின்னர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தியும் அணிவகுத்தன.

வாசகர் கருத்து (2)
.....
வருத்தத்துடன் பகிர்ந்து கொள்ளும் கருத்து, வானில் சாகசம், செய்வது இருக்கட்டும் நானும் பாராசூட்டில் குதித்து பல பதக்கங்கள் வாங்கியவன்தான் . ஜனநாயக நாட்டில் தவறானவர்கள் கைகளில் இந்த சுதந்திரத்தை கொடுத்துவிட்டு சாகசம் செய்து என்ன பயன், மன்னிக்கவும், வந்தே மாதரம்