புதுடில்லி : மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக நிபுணர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களை கேட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக, 'இவாரா அறக்கட்டளை' என்ற அரசு சாரா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சஞ்சிவ் கன்னா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு கூறியுள்ளதாவது: அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்காக, மத்திய சுகாதார அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும், மாற்றுத் திறனாளிகளுக்கு மிகவும் குறைந்த அளவே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், இது தொடர்பாக நிபுணர்கள், தொடர்புடையோரிடம் மத்திய சமூக நீதி அமைச்சகம் ஆலோசனைகள் கேட்க வேண்டும்.
அந்த ஆலோசனைகளின்படி, தேவையான மாற்றங்களை, சுகாதார அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், அதிகமானோருக்கு தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!