dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்: இது தான் தி.மு.க.,வின் கொள்கையா?

Share
Tamil News

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - -மெயில்' கடிதம்: தமிழகத்தில், ஹிந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்து வருவது அதிகரித்து வருகிறது.அப்பாவி ஏழை ஹிந்துக்களுக்கு பணத்தாசை காட்டியும், பள்ளி மாணவ - மாணவியரை மிரட்டியும் மதமாற்றம் செய்கின்றனர்.பல ஆண்டுகளாகவே இது நடைபெற்று வந்தாலும், தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது எல்லாம், இச்சம்பவம் உச்சம் அடைகிறது.

அரியலுார், வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது மாணவி, தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால், அந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார் என புகார் கிளம்பியுள்ளது. இந்த கொடுமையை, எந்த செய்தி ஊடகமும் கண்டுகொள்ளவில்லை; தி.மு.க.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளும், இச்சம்பவத்தைப் பற்றி வாயே திறக்கவில்லை. ஏன், முதல்வர் ஸ்டாலின் கூட இச்சம்பவம் பற்றி எதுவும் கூறாமல் இருக்கிறார்.

இதே சம்பவம், ஹிந்து பள்ளியில் நடந்திருந்தால் இந்நேரம் தி.மு.க. தலைவர்கள், திருமாவளவன், வைகோ, அழகிரி போன்றோர் பொங்கி எழுந்திருப்பர். முதல்வர் ஸ்டாலினும், பள்ளி நிர்வாகம் மீது உடனே நடவடிக்கை எடுத்திருப்பார். மாணவியின் பெற்றோருக்கு இழப்பீட்டு தொகையும் உடனடியாக கிடைத்திருக்கும்.ஆனால் சம்பவம் நடைபெற்றது, கிறிஸ்துவ பள்ளியில் என்பதால் எந்த சத்தமும் வரவில்லை. இதிலிருந்தே, இக்கட்சித் தலைவர்களின் மதச்சார்பற்ற கொள்கை என்ன என்பது, தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

'மத மாற்றம் செய்வது எங்களுடைய வேலை. பிடிக்கவில்லை என்றால் வேறு பள்ளியில் போய் படிக்க வேண்டியது தானே' என்று, பேராயர் எஸ்றா சற்குணம் வெளிப்படையாகவே கூறுகிறார்.'இது எல்லாருக்குமான ஆட்சி' என்று, முதல்வர் ஸ்டாலின் கூறுவது உண்மையானால், பாரபட்சம் இல்லாமல் அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்திலும் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். முதல்வர் ஸ்டாலின் செய்வாரா?
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (130)

 • Ramesh - Chennai ,இந்தியா

  வெட்க கேடு சமூக நீதி என்ற பெயரில் ஊழல், மத மாற்றம், குடும்ப அரசியல் இவை தான் திராவிட அரசியலின் சாதனை. இதை உணராமல் இருப்பது தான் பெரும்பாலான தமிழர்களின் தலை எழுத்து என்று ஆகி விட்டது

 • T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

  பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவந்தபோது ,அதனை பெரும்பான்மை முஸ்லிம்கள் வன்மையாக எதிர்த்தார்கள் .காரணம் முஸ்லீம் நாடுகளில் சிறுபான்மை மதத்தினர் தான் பெரும்பான்மை முஸ்லீம் மதத்தினரால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள் .இதனால் தான் பாகிஸ்தானில் கடந்த எழுபது ஆண்டுகளில் சிறுபான்மை மதத்தினரின் மக்கள்தொகை சதவிகிதம் வெகுவாக குறைந்து விட்டது .ஆனால் மதசார்பின்மை இந்தியாவில் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவந்தால் அதனை சிறுபான்மை மத கிறிஸ்துவர்களும் ,முஸ்லிம்களும் கடுமையாக எதிர்க்கிறார்கள் .காரணம் இந்தியாவில் பெரும்பான்மை ஹிந்துக்கள் தான் மதமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள் .சிறுபான்மை ஒட்டு வங்கிக்காக போலிமதச்சார்பின்மை கூட்டங்களான கருப்பு தாலிபான் திக திராவிட கூட்டங்களும் ,சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் ,குருமா ,சைக்கோ மற்றும் கான்கிராஸ் கட்சிகளும் மதமாற்ற தடை சட்டத்தை எதிர்க்கின்றன .இதனை அனைத்து ஹிந்துக்கள் உணரும் நாள் எந்நாளோ

 • S. Narayanan - Chennai,இந்தியா

  சாதாரணமாக ஒரு மாணவன் அல்லது மாணவி இறந்து விட்டால் யாராய் இருந்தாலும் முதலில் இறக்கப்படுவார். இறந்தவர் என்ன சாதி மதம் என்றெல்லாம் கேட்கமாட்டார்கள். அப்படி இருக்கும் போது ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அது தெரிந்து இருந்தும் அவர் அவர் அமைச்சர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தோழமை கட்சி உறுப்பினர்கள் என்று இத்தனை பெருக்கும் அதை பற்றி விசாரித்து பாதிக்க பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று அந்த கூட்டத்தில் ஒரு ஜென்மத்துக்கும் தெரியாமல் இல்லை வேண்டுமென்று இப்படி நடந்து கொண்டால் இவர்கள் மனிதர்கள் இல்லை என் மிருகத்தை விட கேவளமானவர்கள் என்று தான் மக்கள் நினைப்பர். ஸ்டாலினுக்கு இதுவே கடைசி ஆட்சி. இனி கனவிலும் நினைத்து பார்க்க முடியாது.

 • DVRR - Kolkata,இந்தியா

  கொள்கையா?கொள்கை அல்ல "கொள்ளை" அது தான் சரியான பதம்

 • Soumya - Trichy,இந்தியா

  ஓட்டுப்பிச்சையில் ஆட்சி நடத்தும் விடியலிடம் இந்துக்கள் வேறு எதை எதிர்பார்க்க முடியும்

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்