குப்பை மேட்டில் தீவைப்பு
ஒட்டன்சத்திரம் ; ஒட்டன்சத்திரத்தில் பழநி ரோட்டில் கொட்டப்படும் குப்பையில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகின்றனர்.ஒட்டன்சத்திரம் நகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பை பழநி ரோட்டில் கொட்டப்படுகிறது.
தற்போது ரோடு வரை குப்பை கொட்டப்பட்டு மலைபோல் தேங்கி உள்ளது. இந்த குப்பை மேட்டில் அடிக்கடி தீப்பற்றி எரிகிறது.இதிலிருந்து வரும் புகையால் அவ்வழியே செல்வோர் மூச்சுத்திணறலால் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றியதால் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இங்கு நகராட்சியினர் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!