கழிப்பறையில் பதுக்கிய 360 கிலோ குட்கா பறிமுதல்
ரெட்டியார்சத்திரம் ; ரெட்டியார்சத்திரம் அருகே கழிப்பறையில் பதுக்கி வைத்திருந்த 360 கிலோ குட்காவை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட குட்கா பயன்பாட்டை தடுக்க உணவு பாதுகாப்புத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து ரெட்டியார்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் ஒருவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.நியமன அலுவலர் சிவராமபாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் அங்கு சோதனையிட்டனர். அங்கிருந்த ஒரு கடைக்கு பின்புறம் உள்ள கழிப்பறையில் 360 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.அதிகாரிகள் கூறுகையில், ''பெங்களூரில் வாங்கி வந்து அதிகாலை 3:00 முதல் 5:00 மணிக்குள் கடைகளுக்கு சப்ளை செய்தது விசாரணையில் தெரிந்தது. குட்காவை பதுக்கினாலோ, விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!