உடுமலை:'வெற்றி' அமைப்பின், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், தொழில் துறையினர், கல்வியாளர்கள், இளைஞர்கள், விவசாயிகள் என, பல்வேறு தரப்பினரும் கைகோர்த்துள்ளனர்.'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டம், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன், கடந்த, ஜூன் மாதம் துவங்கியது. தென்மேற்கு பருவ மழை காலம், வடகிழக்கு பருவ மழை காலங்களில், அதிகளவு மரக்கன்றுகள் நடப்பட்டன.கடந்த மாத இறுதியில், 'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கு எட்டப்பட்டது. அத்துடன், பசுமைப்பணி நிறைவடையாமல், பசுமை ஆர்வலர்களின் பேராதரவால், தொடர்ந்து மரக்கன்று நடும் பணி நடக்கிறது.உடுமலை பகுதிகளில், 89 ஆயிரம் மரக்கன்றுகள் வரை நடப்பட்டுள்ள நிலையில், நேற்று உடுமலை அருகேயுள்ள வீதம்பட்டி, வாகத்தொழுவு கிராமத்தை சேர்ந்த, பிருத்திவிராஜூக்கு சொந்தமான விவசாய நிலத்தில், தேக்கு, புங்கன் என, 302 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இலக்கை தாண்டிய பசுமை பயணம்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!