பொருளாதார வளர்ச்சி வேகத்தில் இந்தியா தொடர்ந்து முதலிடம்
உலக பொருளாதார நிலவரம் குறித்து மேம்படுத்தப்பட்ட புதிய அறிக்கையை, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு அக்.,ல் வெளியிட்ட உலக பொருளாதார புள்ளி விபரத்துடன் தற்போதைய அறிக்கையை ஒப்பிடும்போது, 2022 - 23ம் நிதியாண்டில் இந்தியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரம் மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு 2021 - 22ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என, அக்., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது, 0.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 9 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதேபோல இந்திய பொருளாதாரம் 2022 - 23ம் நிதியாண்டில் 9 சதவீதம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொடர்ந்து வேகமான பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடு என்ற சிறப்பை இந்தியா தக்க வைத்துக் கொள்ளும்.
இதே காலத்தில் புதிய மதிப்பீட்டின்படி ஜப்பான் பொருளாதாரம், 3.2 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதமாக அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டில் அமெரிக்க பொருளாதாரம் 5.2 சதவீதம் வளர்ச்சி காணும் என, முந்தைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது, 4 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 5.6 சதவீதத்தில் இருந்து 4.8 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவின் கடன் வளர்ச்சி எதிர்பார்க்கும் அளவிற்கு மேம்படும். மேலும் எதிர்பார்த்ததற்கும் மேலாக நிதித் துறையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்பதால் முதலீடுகளும், நுகர்வு மற்றும் தேவைப்பாடு அதிகரிக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (18)
இந்த ஆண்டும் மூன்று ஆண்டுகளுக்கு முன் இருந்த வளர்ச்சி அடையவில்லை என்பது உண்மை. பொருளாதாரம் வளர்ச்சியின் விகிதத்தில் மட்டும் கணக்கீடு செய்வது முழுமையாகாது. இதன் அளவு இந்தியாவில் குறைவு என்பதால் வளர்ச்சி விஹிதம் அதிகமாக தெரியும். அனால் உண்மையான முன்னேற்றத்ட்ரிக்கு மக்கள் மித அதிகம் உள்ள நம் நாட்டுக்கு இது சரியான அளவுகோல் இல்லை
பொருளாதாரத்தில் பாகிஸ்தானை பின்னுக்குத்தள்ளி முன்னேறி வருகிறோம் அதே போல ஊழலிலும் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி முன்னேறி வருகிறோம் இதை சாதித்த பிரதமர் மோடிக்கு நன்றி
இந்த வைரஸ் 'ஆட்சிக்கு' வந்தபின், உலக நாடுகள் பல பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிவிட்டது. ஆனாலும், ஒரு சில நாடுகள், கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, தங்கள் நாட்டு பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்ல எல்லா ப்ரயத்தனமும் செய்துகொண்டுதான் இருக்கிறது. இந்தியாவும் அப்படி செய்கிறது. இந்திய அரசை புகழாவிட்டாலும் பரவாயில்லை, தாழ்த்தி மட்டும் பேசாதீர்கள். அதுவும் இன்று நமது நாட்டின் குடியரசு தினம் கொண்டாடப்பட்டுவரும் இந்த நேரத்தில். முடிந்தால் வளர்ச்சிக்கு உதவுங்கள். முடியாவிட்டால் பரவாயில்லை, முட்டுக்கட்டையாக இருக்காதீர்கள். உங்களுக்கு பிடித்த நாட்டுக்கு செல்லுங்கள்.
கொட்டாம்பட்டியில பிச்சை எடுக்கிறவன் எல்லாம் டாலரை பத்தி பேசுறான்னா கட்டுமர சமசீர் நல்ல கல்விதான் போல...
சர்வதேச நிதியம் கொடுத்த கடிதத்தை வெளியிடவும்.