dinamalar telegram
Advertisement

பல்கலைகளின் எதிர்காலம் கேள்விக்குறி : ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

Share
Tamil News
புதுடில்லி :'பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி மையங்கள் கொரோனா காரணமாக 'டிஜிட்டல்' முறைக்கு தற்காலிகமாக மாறினாலும், அவை எதிர்காலத்தில் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரும்' என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு'எர்னஸ்ட் அண்டு யங்' என்ற ஆலோசனை நிறுவனம் உயர்கல்வித் துறையின் எதிர்காலம் குறித்து இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 29 பல்கலைகளின் வேந்தர்களிடம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:முன்னேறிய நாடுகளைச் சேர்ந்த பல்கலைகள் கொரோனா காரணமாக ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. அவை மாறும் பணிச் சூழலின் தேவைகள், தரமான டிஜிட்டல் படிப்பிற்கான மாணவர்களின் எதிர்பார்ப்புகள், புவிசார் அரசியல் சவால்கள் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள நேரிடும்.கொரோனா பரவலால் தற்காலிகமாக வீடுகளில் மாணவர்கள் கல்வி கற்பது, மாற்றத்திற்கான ஒரு துவக்கம் தான். பல்கலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், இயல்பு நிலை திரும்பாது என, ஆய்வில் பங்கேற்ற பலர்
தெரிவித்துள்ளனர்.

அச்சுறுத்தல்ஊடகம், சில்லரை விற்பனை, எரிசக்தி ஆகிய துறைகளின் வர்த்தகம் அடைந்து வரும் மாற்றம் போல, உயர் கல்வித் துறையிலும் வேகமான மாற்றம் வர உள்ளது. அதை சமாளிக்கும் திட்டங்களை பல்கலைகள் இப்போதே உருவாக்கத் துவங்க வேண்டும். நாளைய மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையிலான கல்வி போதிப்பு, கல்வி கற்றல் ஆகியவற்றை மேம்பட்ட தரத்தில் வழங்கினால் மட்டுமே போட்டியை சமாளிக்க முடியும்.
பல்கலைகள் அவற்றின் ஏகாதிபத்திய அங்கீகாரத்தை இழந்து விட்டன. அவை, பட்டமளிப்பு நடைமுறை சாராத, அவ்வப்போது மேம்படுத்தப்பட்ட கல்வியை போதிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளன.இல்லையெனில் எதிர்காலத்தில் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு பல்கலைகள் தள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • venkatan - Puducherry,இந்தியா

  பல்கலை.எங்களுக்கு க்கவுரவ நிறுவனங்கள்.மற்றப்படி ஏற்கனவே அறிவு சாராத ஆராய்ச்சிக்கு உதவாத அரசியல் களங்களாக மாற்றிவிட்டோம்.இனி எங்களைப்போல் ஆகிவிடுங்கள். நாங்கள் உலகிற்கே வழிகாட்டி.

 • Tamilan - NA,இந்தியா

  அந்நியத்துவம் அனைத்தையும் கெடுத்து குட்டிசுவராக்கிவிட்டது .படிப்பதை குறைத்து பந்தா பண்ணுவதில் அதிக கவனம் செலுத்துகிறது

 • Ram - ottawa,கனடா

  எங்க ஊர்ல இருக்கற மெட்ராஸ் பல்கலை பாரதிதாசன் பாரதியார் பெரியார் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்கள் கால்வாத்தியாகி மாமாங்கம் ஆச்சு

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அலுவலகம் வீட்டுக்குள் வந்துவிட்டபடியால் மாற்றத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். வேறு வழி கிடையாது.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  குருகுல கல்வி முறைக்கு மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை.

Advertisement