புதுடில்லி :நாட்டின் பொருளாதாரம், கொரோனா பாதிப்புகளிலிருந்து 'அழகாக' மீண்டுள்ளது என, 'நிடி ஆயோக்'கின் முன்னாள் துணைத் தலைவர்
அரவிந்த் பனகாரியா கூறியுள்ளார். மேலும், நாட்டின் பொருளாதார மீட்சி நீடித்து, வளர்ச்சி விகிதம் 7 முதல் 8 சதவீதமாக மீட்டெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
நாட்டின் பொருளாதாரம், கொரோனா பாதிப்புக்கு முந்தைய நிலைக்கு அழகாக மீண்டுள்ளது. இருப்பினும், தனியார் நுகர்வு இன்னும் கொரோனாவுக்கு முந்தைய நிலையைவிட குறைவாகவே இருக்கிறது.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம், நாட்டின் பொருளாதாரம், நடப்பு நிதியாண்டில் 9.2 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இது, உலகின் வேறு எந்த நாடுகளை விடவும் அதிகமாகும்.கடந்த நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டு, மைனஸ் 7.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.

அதான் பங்குச்சந்தை வீழ்ந்து வருகிறதே...