நடிகர் முத்தமிட்ட வழக்கு: ஷில்பா ஷெட்டிக்கு நிம்மதி
மும்பை : கடந்த 2007ல் ராஜஸ்தான் மாநிலத்தில் 2007ல் எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் பாலிவுட் நடிகையும், குஷி என்ற தமிழ் படத்தில் நடித்தவருமான ஷில்பா ஷெட்டி, 46, பங்கேற்றார். ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேயும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது. மேடையில் இருந்தபோது, திடீரென ஷில்பாவை கட்டியணைத்து ரிச்சர்ட் கெரே முத்தமிட்டார்.
இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் ரிச்சர்ட் கெரே மன்னிப்பு கேட்டார். இந நிலையில் 'மேடையில் முத்தமிட்டதற்கு ஷில்பா ஷெட்டி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இது திட்டமிட்டு நடந்த நாடகம்' என, ராஜஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 'ஷில்பா ஷெட்டி பாதிக்கப்பட்டவர். திட்டமிட்டு அந்த சம்பவம் நடக்கவில்லை. அதனால், அவர் குற்றமற்றவர்' என, நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

வாசகர் கருத்து (4)
அதாவது ஒரு நாடு எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை வைத்து அந்த நாட்டின் தராதரம் குறித்து அறியலாம்
என்னமோ புது கேஸாக இருக்கு.
14 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். நீதித்துறை படு வேகம். கிழிந்தது
இதை ஒரு கேசா நீதிபதி எடுத்துக்க என்ன காரணம்? அடிக்கடி ஷில்பா கோர்ட்டில் ஆஜராவார் என்பதுதான் காரணமா ?