மார்ச் 11, 12ல் கச்சத்தீவு திருவிழா தமிழக பக்தர்களுக்கு தடை
ராமேஸ்வரம்:மார்ச் 11, 12ல் நடக்கவுள்ள இலங்கை கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவில் பங்கேற்க தமிழகபக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து 14 கடல் மைல் துாரத்தில் உள்ள கச்சத்தீவில் அந்தோணியார் சர்ச் உள்ளது. பல ஆண்டுகளாக இத்திருவிழாவில் இந்திய, இலங்கை மீனவர்கள் பங்கேற்று வந்தனர். இலங்கை உள்நாட்டு போரினால் 1982 - 2009 வரை திருவிழாவில் பங்கேற்க இருநாட்டு பக்தர்களுக்கும் அரசு தடை விதித்தது.
இந்நிலையில் வரும் மார்ச் 11ல் கச்சத்தீவு சர்ச்சில் திருவிழா கொடி ஏற்றப்பட்டு, மார்ச் 12ல் திருப்பலி நடக்க உள்ளது. கொரோனா பரவலால் இவ்விழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்க இலங்கை தடை விதித்தது. ஆனால் இலங்கையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், கொரோனா பாதிப்பு இல்லாத 500 பக்தர்கள் பங்கேற்க, அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!