dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

Share
புதுடில்லி; இந்தாண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவர்கள் விவரம்:

1) சிற்பி பாலசுப்ரமணியம் (இலக்கியம், கல்வி ) தமிழகம்

2) நடராஜன் (கலை ) தமிழகம்
3) முத்துகண்ணம்மாள் (கலை) தமிழகம்
4) சவுகார் ஜானகி (கலை) தமிழகம்
5) எஸ்.தாமோதரன் (சமூக சேவை) தமிழகம்
6) வீராசுவாமி சேஷையா (மருத்துவம் ) தமிழகம்
7) எஸ்.பல்லேஸ் பஜந்திரி -(கலை ) -தமிழகம்

பத்மஸ்ரீ விருது கிடைத்தது அவர்கள் கூறியதாவது:
நடிகை சவுகார் ஜானகி
நடிகை சவுகார் ஜானகி கூறியது, தமிழக மக்களின் அன்பான வரவேற்பு இன்னும் எனக்கு தொடர்கிறது. பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி. இந்த விருது கிடைக்க முக்கிய காரணம், நான் நடித்த தமிழ் படங்கள் தான். நன்றி சொல்வதை காட்டிலும், தமிழக மக்கள் சார்பில் எனக்கு கிடைத்த கவுரவத்தை, தலைவணங்கி ஏற்பதை பெருமையாக நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

சமர்ப்பணம் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன்

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கோவை மாவட்டம், ஆத்துப்பொள்ளாச்சி என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். நாட்டின் உயரிய பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வானதை அறிந்து பெருமை அடைகிறேன்.
இது என்னளவில் வரலாற்று சிறப்பு மிக்கது. தமிழின் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த வகையில் பங்காற்றி வரும் அனைவருக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

சதிராட்டக் கலைஞர் .முத்துக்கண்ணம்மாள்,84

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிர மணியசாமி கோவிலில் உள்ள முத்துக்கண்ணம்மாள்,84 தமிழகத்தின் கடைசி தேவதாசி. சதிர் நாட்டியக் கலைஞர். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களில் ஒருவராக இருந்தார்.
தன், 7 வயதில், தந்தை ராமச்சந்திரனிடம் சதிர் நடனம் கற்ற முத்துக்கண்ணம்மாள் மட்டும், ஆடிய பாதத்தையும், பாடிய வாயையும் கட்டிப்போட விரும்பாமல், தன் இறைவனான முருகனுக்காக தினமும் 400 படிகள் ஏறி பாடி ஆடியவர். தற்போது, திருவிழா காலத்தில் மட்டும் ஆடுகிறார்.
தன்னிடம் விரும்பி கேட்போருக்கு பாடவும், ஆடவும் சொல்லித் தருகிறார். கடந்த 75 ஆண்டுகளாக, தன்னை கலைக்காக அர்ப்பணித்த முத்துக்கண்ணம்மாளின் கலை சேவையை அங்கீகரக்கும் வகையில், மத்திய அரசு, இந்தாண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.
அங்கீகாரம்

ஏ.கே.சி.நடராஜன், 92,
திருச்சியில் 1931ல் பிறந்த ஏ.கே.சி.நடராஜன், 92, பத்து வயதில் வாய்ப்பாட்டு கற்ற பின் நாதஸ்வரம் வாசிக்க துவங்கினார். நாதஸ்வரத்தில் இருந்து வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காக, பக்க வாத்தியமாக, மேலைநாட்டு காற்றுக் கருவியான கிளாரினெட்டைத் தேர்வு செய்து, அதன் பொத்தான்களை, கர்நாடக இசைக்கு ஏற்ப மாற்றி அமைத்தார்.
பின், தமிழகத்தின் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் பக்கவாத்தியமாக கிளாரினெட்டை, குழைவான நாதம், ஸ்ருதி சுத்தம், லய சுத்தம், சாகித்திய சுத்தம், கமகங்கள், ஜாருக்கள் என அனைத்தையும், குழைவுடன் வாசித்து, ரசிகர்களை கிறங்கடித்தவர்.
அவரின் கலைத் திறமையை அங்கீகரிக்கும் வகையில் இந்தாண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை டாக்டர் டாக்டர் சேஷய்யா


சென்னையை சேர்ந்த டாக்டர் சேஷய்யா 1938ல் பிறந்தவர். 1957ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., முடித்து, இந்திய ராணுவத்தில் மருத்துவ சேவையாற்றினார்.
1962ல் இந்திய சீன போரில், இந்திய ராணுவத்தின் மருத்துவப் பிரிவுக்கான கேப்டனாக பணியாற்றி, ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார். 1965ல் இந்தியா - பாகிஸ்தான் போரிலும் சேவையாற்றினார்.
அதைத் தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் எம்.டி., முதுநிலை படிப்பை நிறைவு செய்து, நீரிழிவு நோய்க்கான சிறப்பு சிகிச்சையில் கவனம் செலுத்தினார்.
பி.சி.ராய் விருது, சமர் சேவா ஸ்டார் 1965, சைன்யா சேவா பதக்கம், சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு சார்பிலான வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல விருதுகள் பெற்ற சேஷய்யா, பத்ம விருதுக்காக மத்திய அரசுக்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

 • Rajan -

  Republic day special award.வைகோ, மொத்தரசன் போன்றோர்க்கு Best கொத்தடிமை சொம்பு தூக்கி ஜால்ரா விருது வழங்கப்பட்டது.

 • abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா

  வாழ்த்துக்கள் .... விருதுபெறும் தமிழகத்தில் உள்ள கலைஞர் அவர்களுக்கு

 • Balasubramanian - Bangalore,இந்தியா

  சுந்தர் பிச்சையையும் சேர்த்து தமிழகத்தை சார்ந்த எண்மர் என எண்ணி பெருமை கொள்ளலாம் ☺️

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  சந்தோஷம். இருந்தாலும் சின்ன தளபதிக்கு விருது கொடுக்காதது சற்று வருத்தமாக உள்ளது.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்