dinamalar telegram
Advertisement

56 மீனவர்கள் விடுதலை

Share
ராமேஸ்வரம்:கடந்த டிசம்பர் 19 மற்றும் 21ம் தேதிகளில், மீன் பிடிக்க சென்ற 56 தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், மீனவர்களை விடுவிக்க இலங்கை அட்டர்னி ஜெனரல் யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பினார். நேற்று 56 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது. யாழ்ப்பாணம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சிறை பிடித்த எட்டு விசைப் படகுகளின் உரிமையாளர்கள் ஏப்., 1ல் நீதிமன்றத்தில் ஆஜராகி, படகுகளை மீட்க வழக்கு தொடரலாம்.
மேலும், விடுவிக்கப்பட்ட 56 மீனவர்களும் அடுத்த 18 மாதங்களுக்குள் மீண்டும் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்து கைதானால், சிறை தண்டனை உறுதி என கெடு விதித்து உத்தரவிட்டது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement