10 நாளில், 3,614 பேர் குணம்
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா வேகத்துக்கு ஏற்ப, நலம் பெற்று வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது, சுகாதாரத்துறையை சற்று ஆறுதல் அடைய செய்துள்ளது. கடந்த 14ம் தேதி, 117 ஆக இருந்த 'டிஸ்சார்ஜ்', 18ம் தேதி, 314 ஆக உயர்ந்தது.வரும் 20ம் தேதி முதல், தொற்று குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை, 400ஐ கடந்து பதிவாகி வருகிறது.
கடந்த பத்து நாட்களில், 3,614 பேர் தொற்றில் இருந்து மீண்டு நலம் பெற்றுள்ளனர். குறிப்பாக, கடந்த மூன்று நாட்களில் மட்டும், 1,800 பேர் குணமடைந்துள்ளனர். இம்மாத துவக்கத்தில் 97 ஆயிரத்து, 219 ஆக இருந்த நலம் பெற்றோர் மொத்த எண்ணிக்கை, நேற்று முன்தினம் ஒரு லட்சத்து, 1,566 ஆக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஜூன் 11க்கு பிறகு, 'டிஸ்சார்ஜ்' நேற்று முன்தினம், 736 ஆக உயர்ந்தது.
சுகாதாரத்துறையினர் கூறுகையில், ''ஏழு நாட்கள் வீட்டுத்தனிமையில் இருப்பவர் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல், உடல்நலக்குறைவு இல்லையெனில் நலம் பெற்றோர் பட்டியலில் சேர்க்கப் படுகின்றனர்.பாதிப்பு உறுதியாகிறவர்களில் 70 சதவீதம் பேர் விரைவாக குணமடைந்து விடுகின்றனர். அதிலும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர் விரைவாகவே தொற்றில் இருந்தும், வீட்டுத்தனிமையில் இருந்தும் மீட்கப்படுகின்றனர்.கட்டாயம், 18 வயதை கடந்த அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால், கொரோனா பாதித்தாலும், உயிர் பிழைத்துக் கொள்ளலாம்'' என்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!