தேசிய வாக்காளர் தினவிழா
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தேசிய வாக்காளர் தினவிழா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசன் முன்னிலை வகித்தார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, நடந்த போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.புதிய வாக்காளர் அட்டைகள் மற்றும் சிறப்பாக தேர்தல் பணிபுரிந்த வாக்குசாவடி அலுவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிகுமார், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., சேக் மன்சூர்மற்றும் அரசுதுறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் சி.எஸ்.ஐ., தொடக்கப் பள்ளியில், வட்டாட்சியர் முருகவேல் தலைமையில், வாக்காளர் தின விழா உறுதிமொழி ஏற்கப்பட்டது. துணை தாசில்தார் பாலகுமார் இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கினார். கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!